உதயநிதி ஸ்டாலினுக்கு துணை பிரதமர் பதவி...?! ராகுல் காந்தியின் பிரதமர் பதவிக்கு வேட்டு வைக்கும் மம்தா பானர்ஜி...!?

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை பிரதமர் பதவி...?!  ராகுல் காந்தியின் பிரதமர் பதவிக்கு வேட்டு வைக்கும் மம்தா பானர்ஜி...!?


ராகுலின் பிரதமர் கனவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா குறுக்கே நிற்பதால், அவரை ஓரங்கட்டும் முயற்சியில் ராகுல் இறங்கி இருப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

வரும் 2024 லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பா.ஜ.,வுக்கு எதிராக ஓரணி யில் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.இதையொட்டி ஐந்து நாள் பயணமாக சமீபத்தில் டில்லிக்கு வந்தார். அப்போது காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து பேசினார்.எதிர்க்கட்சியான காங்.,கின் செயல்பாடு மேலும் வலுவாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து செயல்படும்படியும் சோனியாவிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மம்தா சந்திப்பை தொடர்ந்தே, எதிர்க்கட்சி தலைவர்களுடனான காலை உணவு சந்திப்பு கூட்டத்திற்கு ராகுல் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.மேலும், 'பா.ஜ.,வுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி காங்., வாயிலாக நடக்க வேண்டும்' என, ராகுல் நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் மம்தாவின் முயற்சியில் அவர் அதிகம் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பதாகவும் தெரிகிறது.


இதற்கிடையே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் மம்தாவின் முயற்சி, ராகுலின் பிரதமர்கனவுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.எனவே மம்தாவை எரிச்சல் அடையச் செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூ.,வுடன் காங்., நெருக்கம் காட்ட துவங்கி உள்ளதாக டில்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

தேசிய அளவில் மம்தா கட்சிக்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கின்ற கட்சியாக திமுக இருக்கின்றது தற்போது அதிகப்படியான எம்பிக்களை மாநிலங்களவை மற்றும் மக்களவை யில் திமுக பெற்றுள்ளதால் தேசிய அளவில் பெரிய கட்சியாக உருவெடுக்க திமுக முயற்சித்து வருகிறது.2024ல் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என்று திமுகநம்புகிறது. இதை வைத்து திமுக ஒரு புது கணக்கு போட்டு வருகிறது.

2014 கைவிட்டுப்போன மத்திய அமைச்சரவை பதவிப் பிடிப்பது ஒருபுறம் என்றாலும் இந்த முறை எப்படியாவது திமுகவை சேர்ந்த ஒருவருக்கு துணை பிரதமர் பதவியை பெற்று தருவது இலக்காக கொண்டு திமுக செயல்பட்டு வருகிறது. 

அப்படி ஒரு வாய்ப்பு உருவானால் அந்த வாய்ப்பு தயாநிதிக்கா அல்லது  உதயநிதிக்கா என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த போட்டியில் உதயநிதியை ஜெயிப்பார் என்று தெரிகிறது.

எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்...?!