செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர விழா

  செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில்  75-வது சுதந்திர விழா


ராமநாதபுரம் ஆகஸ்ட்-15 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 75-வது சுதந்திர விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. தேசியக்கொடியை பள்ளியின் தாளாளர் மருத்துவர் பாபு அப்துல்லா ஏற்றிவைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது இதனையடுத்து இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜா முகைதீன்  உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சமூக இடைவெளி விட்டு அனைவரும் நின்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு