திமுக அரசின் 100 நாட்கள் சாதனை கொண்டாட்டம்...

திமுக அரசின் 100 நாட்கள் சாதனை கொண்டாட்டம்....


ராமநாதபுரம் ஆகஸ்ட்-14 

ராமநாதபுரம் அரண்மனையில் இன்று 14.08.2021  திமுக தெற்கு நகர் கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான  திமுக அரசின் 100 நாட்கள் சாதனையை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அரண்மனை முன்பும்  திமுக கட்சியின் கொடி ஏற்றியும் கொண்டாடினார்கள். தமிழக முதல்வர்  ஸ்டாலின் தலைமையிலான 

திமுக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்கள் சாதனையை  திமுக கட்சியினர் வெற்றி விழாவாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தெற்கு நகர் கழக பொறுப்பாளர்  பிரவீன் தங்கம், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, சேர்மன் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் இன்பாரகு, நகர் மீனவரணி செயலாளர் அசோக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு