சேலத்திற்கு பெருமை சேர்க்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் குடும்பம்.
இபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், 'முதல்வர் மாவட்டம்' என்ற பெருமையை இழந்த சேலம், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இறையன்பு மூலம், 'தலைமைச் செயலாளர்' மாவட்டம்' என்ற புதிய பட்டத்தை பெற்றுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அப்போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, 2017 பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்றார்.
இபிஎஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஆகும் இதன் காரணமாக அவர் தமிழக முதல்வராக பதவி வகித்துவந்த காலம் வரை, சேலத்துக்கு முதல்வர் மாவட்டம் என்ற பெருமை இருந்து வந்தது.
அத்துடன், தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் பணி ஓய்வு பெற, இந்த உயர் பதவிக்கு சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த சண்முகம் கடந்த 2019 ஜூனில் நியமிக்கப்பட்டார்.
அத்துடன், தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் பணி ஓய்வு பெற, இந்த உயர் பதவிக்கு சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த சண்முகம் கடந்த 2019 ஜூனில் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து மாநில முதல்வர், தலைமைச் செயலர் என, இரு பெரும் அதிகார மையங்களை பெற்ற மாவட்டமாக சேலம் திகழ்ந்தது.
இந்த நிலையில் சண்முகம் கடந்த ஜனவரி 31 இல் ஓய்வு பெற்றார். இருப்பினும் தமிழக அரசின் ஆலோசகராக இருந்து வந்த அவர், சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து கடந்த 3 ஆம் தேதி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால் இபிஎஸ்ஸும் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் முதல்வர் மாவட்டம் என்ற பெருமை சேலம் இழந்தது.
தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால் இபிஎஸ்ஸும் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் முதல்வர் மாவட்டம் என்ற பெருமை சேலம் இழந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் நேற்று முன்தினம் (மே 7) பதவியேற்று கொண்டார். இதனையடுத்து வெ.இறையன்பு ஐஏஎஸ், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'முதல்வர் மாவட்டம்' என்ற பெருமையை இழந்த சேலம், 'தலைமைச் செயலாளர் மாவட்டம்' என்ற புதிய பட்டத்தை தற்போது பெற்றுள்ளது.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள தலை சிறந்த எழுத்தாளர் பேச்சாளர் நேர்மையான நிருவாகி இறை அன்பு IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர் நிர்வாகத்தில் தமிழகம் உயரும் என நம்புவோம்.
அவரின் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தன் இரு புதல்வர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி, சேலத்துக்கு பெருமை சேர்ந்த தந்தை...!
நம் சேலம் மண்ணின் மைந்தர்களான திரு.வெ.திருப்புகழ் I.A.S, மற்றும் திரு .வெ.இறையன்பு I.A.S இருவரின் தந்தை மரியாதைக்குரிய அய்யா திரு.வெங்கடாஜலம் அவர்கள் இன்றும் சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகரில் பழைமைமாறாத பாரம்பரிய வீட்டில் இயற்கைச்சூழலில் எளிமையாக வசித்து வருகிறார்...!
அய்யா திரு.வெங்கடாஜலம் அவர்கள் தமிழ்மீது தீவிரப்பற்றும் ,கல்வியின் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்தவர்...! அதனால் தன் வாரிசுகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டி, நன்கு படிக்கவைத்து மிக சிறந்த வாழ்க்கையை கொடுத்துள்ளார்...!
அய்யாவின் மூத்தமகள் திருமதி பைங்கிளி அவர்கள் சேலம் சாரதா கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியாக திறம்பட பணியாற்றி ஒய்வு பெற்றவர்...!
அடுத்த மகள் திருமதி இன்சுவை அவர்கள் அருமையாக படித்து பத்து பட்டங்களுக்கு மேல் பெற்றவர்..!
மூத்த புதல்வர் திரு.வெ.திருப்புகழ் ஐ.ஏ.எஸ் அவர்கள் டெல்லியில் இந்திய பிரதமர் மோடியின் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்...!
மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது ஏற்பட்ட பூகம்பத்தின் போது,அப்போது அங்கு பணியாற்றிய திரு.வெ.திருப்புகழ் ஐ.ஏ.எஸ் அவர்கள் மீட்பு பணிகளை சிறப்பாக களத்திலிருந்து மேற்கொண்டு மக்களின் பாராட்டை பெற்றவர்...! Disaster management படித்த ஒரே ஐ.ஏ.எஸ் அதிகாரி இவரே..!
இளைய புதல்வர் நம் அன்பிள்குரிய வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் தமிழக அரசுத்துறை முதன்மை செயலர்,இயக்குனராக சென்னையில் பணியாற்றி வருகிறார்...!
இறையன்பு சார் நேர்மையான,திறமையான,எளிமையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்....!
சுனாமி மீட்பு பணிகளை நாகப்பட்டினம் பகுதிகளில் சிறப்பாக மேற்கொண்டவர்...!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலாபள்ளிகளை துவக்கி அனைவரையும் கல்வி கற்க வைத்தவர்...!.
மிகச்சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்...! இலக்கியவாதி, மனிதநேய பண்பாளர், 30 க்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதிய நூலாசிரியர் என பலசிறப்புக்கள் திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உண்டு...!
அய்யா திரு.வெங்கடாஜலம் அந்தகாலத்தில் பலமைல் தூரம் சைக்கிள் மிதித்து சென்று வேலைபார்த்து தன் குழந்தைகளை படிக்க வைத்தவர்....!
இப்படி இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நம் சேலம் மண்ணிற்கு தந்து பெருமை சேர்ந்த அய்யா திரு வெங்கடாஜலம் அவர்கள்.