தேனி அரசு மருத்துவமனை முன்பு போலிசார் கொரோ விழிப்புணர்வு
தேனி மாவட்டத்தில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ் உத்தரவுப்படி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருந்துவ மனை முன்பு கானா விளக்கு போலிசார் தொடர்ந்துகொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் படி சிறப்பு நுழைவு வாயில் மற்றும் மருத்துவமனை பொது நுழைவு வாயில் பகுதிகளில் 24 மணி நேரமும் 2 சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 27 காவல் ஆளிதளர்கள் சுழற்சி முறையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு மேலும் தொற்று பரவாமல் தடுக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனர் வார்டுகளில் சமூக இடைவெளி விட்டு இருக்கும் படி ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன மேலும் மருந்துவ மனைக்கு வரும் பொதுமக்கள் தொற்று பரவாமல் இருக்க நோய் தொற்று வார்டு களுக்கு செல்வதை தவிர்க்க வலியுருத்தியும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்
தேனி மாவட்ட செய்திக்காக
அ.வெள்ளைச்சாமி