தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காத்திடுங்கள்; பள்ளிக் கல்வி அமைச்சருக்கு மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

 தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காத்திடுங்கள்; பள்ளிக் கல்வி அமைச்சருக்கு மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை



பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வாழ்த்து கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு தனியார் பள்ளிகள் பிரச்சனைகள் அடங்கிய கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதார நிதி, 2020 _ 21ஆம் ஆண்டிற்கான .ஆர். டி. இ.  கல்வி கட்டண பாக்கி. கிடைத்திட ,நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.

 மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு... தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 தங்களைப் போன்ற நல்ல இளைஞர்கள் படித்தவர்கள் பண்பாளர்கள்இப்பெரிய துறையாம் பள்ளிக்கல்வித்

துறைக்கு  தமிழக முதல்வர் மாண்புமிகு. தளபதி மு  க. ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் பொறுப்பேற்றுள்ள தைப் பெருமையோடு வரவேற்கின்றோம்.

 எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அன்றும் இன்றும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு

உருதுணையாக.... எங்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரையும் நாங்கள் அரவணைத்து தேர்தல்  பணியாற்றி வெற்றிபெறச் செய்ததில் தனியார் பள்ளிகளுக்கு

மிகப்பெரும் பங்கு உண்டு என்பதை நமதுகழக தலைவர் உள்ளிட்ட கழக  முன்னோடிகள் அனைவரும் அறிவார்கள்.

 தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அரசின் பெரும்பணச்சுமையையும் பணிச்சுமையையும் குறைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் தந்து மத்திய மாநில அரசின்  பொருளாதாரத்தை உயர்த்தி

தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் மிகப் பெரும் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது...

 2020 மார்ச் மாதம் தொடங்கி இன்றைய தேதி வரை 2 ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. படித்த படிக்காத மாணவர்கள் அனைவரையும்ஆல் பாஸ் என்று அறிவித்து விட்டோம்.

ஆனால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் முறையாக வழங்கப்படவில்லை. மாணவர்களின் கல்வித்தரம் ஆராயப்படவில்லை. பள்ளிகள் திறக்கவில்லை. பாடம் நடத்த முடியவில்லை. பாடங்களை இணையதள வழியாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் சென்னை உயர்நீதிமன்றம் 75 சதவீத கட்டணம் தனியார் பள்ளிகள் வாங்கிக்கொள்ளலாம்  என்று தீர்ப்பு வழங்கியும்  20% பள்ளிகளால்கூட அந்த கல்வி கட்டணத்தை  வசூலிக்க முடியவில்லை.

 குறிப்பாக நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஒரு  சதவீதம் கூட வசூலிக்க முடியவில்லை. அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வந்து தற்கொலைக்கு  தள்ளப்பட்டனர்.

 எனவே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வாழ்விழந்து நிற்கும் கல்வி கற்பிப்பதை தவிர  வேறு வேலை தெரியாத  எமது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் வாழ்வாதார நிதியாக தெலுங்கானா அரசு தந்தது போல் மாதம்தோறும் ரூபாய் 2500 வாழ்வாதார நிதியும் 25 கிலோ அரிசியும் தந்தால் அவர்கள் உயிர் வாழ ஏதுவாகும்.

 10, 11, 12,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மதிப்பெண்களோடு கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க.. அந்தந்த பள்ளிகளில் நடத்திய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை நிர்ணயிக்கலாம் அல்லது இணையதள வழியாகக் கூட திறனறி  தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை நிர்ணயித்தால் சிறப்பாக இருக்கும். மதிப்பெண்கள் இல்லாத மதிப்பெண் சான்றிதழ் கொரோனாவுக்கு

சமமாகும் என்பதை அருள் கூர்ந்து மனதில் நிறுத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துங்கள் என்று அன்போடு வேண்டுகின்றோம்.

மாணவர்களின் உயர்கல்விக்கு மதிப்பெண் சான்றிதழ், தரத்தை நிர்ணயிக்க அடுத்து படிக்கவேண்டிய படிப்புகளைத் தேர்வு செய்திட, மதிப்பெண் சான்றிதழ்  மரியாதையாக இருக்கும்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலித்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும். இல்லை  என்றால் பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த மாட்டார்கள். பெற்றோர்கள் நிலை உணர்ந்துதான் தனியார் பள்ளிகள் செயல்பட்டு கொண்டுள்ளன.

 ஏதோ ஒரு சில பள்ளிகள் தவறு செய்கிறபோது அந்த பள்ளிகள் மீது தனியாக நடவடிக்கை எடுக்கலாம்.

அதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

 பொத்தாம் பொதுவாக எல்லா பள்ளிகளையும் ஒரே மாதிரி கணக்கிட்டு ஏற்கனவே நலிந்து  போயுள்ள பள்ளிகளையும் நசுக்கி விடக்கூடாது என்று பணிவோடு வேண்டுகின்றோம்.

 அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25% மாணவர்கள்

சேர்த்திட்ட வகையில் 2020..21 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய, மாநில அரசுகள்  தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கி 100% நிலுவையில் உள்ளதால் வாழ்விழந்து வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் தத்தளித்து  நிற்கும் தனியார் பள்ளி நிர்வாகிளுக்கு தந்து உதவினால் மீண்டும் உயிர் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு

உரியநடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம். 

 பாடத்திட்டம், கல்விக் கட்டணம், தேர்வு முறைகள்,பள்ளிகள் திறத்தல், மாணவர்கள் பாதுகாப்பு எனகல்வி சார்ந்த எந்த பிரச்சனை என்றாலும் தனியார் பள்ளிகள் சார்பாக தமிழகத்தின் மிகப்பெரும் சங்கமான எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்

ஒரிருவரையாவது நீங்கள் அமைக்கும் குழுவில்.... கருத்து கேட்பு கூட்டத்தில் நேரில் அழைத்து கருத்துக்களைக் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டுமாய் மெத்த பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

 தமிழக அரசின் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் நாங்கள் என்றும் பக்கபலமாய்  உடனிருந்து ஒத்துழைப்போம் என்கிற உறுதிமொழியை என்னாலும் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கின்றோம்.

 தங்கள் உண்மையுள்ள

கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.

 நாள்..08.05.2021

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்