லாக் டவுன் காலத்திலும் ஏழைகளின் பசியாற்றும் அம்மா உணவகங்களுக்கு அனுமதி

லாக் டவுன் காலத்திலும் ஏழைகளின் பசியாற்றும் அம்மா உணவகங்களுக்கு அனுமதி



தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மே 10-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ள இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாட்களும் கடைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது போல் அனைத்து உணவகங்களிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

உணவு விநியோகம், மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் அனுமதி இல்லை. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு லாக்டவுனின் போது ஏழை மக்களின் பசியாற இந்த அம்மா உணவகங்கள்தான் பெரிதும் கை கொடுத்தன. தன்னார்வலர்கள் ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுத்து வந்த போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இலவசமாக உணவு அளித்து வந்தன.

ஏழை மக்களின் உணவுத் தேவையை அம்மா உணவகம் பூர்த்தி செய்ததில் முக்கிய பங்காற்றியது திமுக அரசு அறிந்த காரணத்தினாலேயே அம்மா உணவகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஏழை மக்கள், கூலி தொழிலாளிகள், முன்கள பணியாளர்களுக்கும் இந்த உணவகம் கைக்கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை வீசி எறிந்த திமுகவினர், உள்ளே புகுந்து சமைக்க தயாராக இருந்த பொருட்களையும் துவம்சம் செய்தனர். இதையடுத்து அந்த திமுகவினரை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர்கள் மீது நடவடிக்கை பாயவும் திமுக அரசு உத்தரவிட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்