24-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படாது- முதல்வர் உறுதி
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நேற்றைய தினம் காலை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது குறித்து அறிவிக்கப்பட்டது
அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு ஏற்படாது. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
முழு ஊரடங்கு அமல் செய்வதற்கு முன்னரே உங்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே நாட்டு மருந்து கடைகள், ஹோட்டலுடன் கூடிய பேக்கரிகளை திறக்க அனுமதி கோரி வணிகர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.