போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்த ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் வார்டு உறுப்பினர் கலெக்டரிடம் மனு

 போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்த ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்  வார்டு உறுப்பினர் கலெக்டரிடம் மனு   



தேனி, ஏப்.24-           தேனி மாவட்டம், G.கல்லுப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி  மன்றத் தலைவர் பதவிக்கு போலியான சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து, வெற்றி பெற்றுள்ளார் என்று  கூறப்படுகின்றது. இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு மனு தாக்கல் செய்த நிலையில், மகேஸ்வரியின் போலியான சாதிச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார். மகேஸ்வரியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியிலுள்ள 1வது வார்டு உறுப்பினர் நாகஜோதி, 2வது வார்டு உறுப்பினர் வீரலட்சுமி, 4வது வார்டு உறுப்பினர் செல்லப்பாண்டி , 9வது வார்டு உறுப்பினர் மதுமிதா, 10வது வார்டு உறுப்பினர் சுலைமான், 11வது வார்டு உறுப்பினர் சேகர், சின்னத்தாய் ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்ட செய்திக்காக 

அ.வெள்ளைச்சாமி