பள்ளிக்கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனின் கோபி தொகுதி எப்படி.....?!
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் போட்டியிட்ட கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி, அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதி. இத்தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும், 9 முறைஅ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது.
செங்கோட்டையன் சத்தியமங்கலம் தொகுதியில் 1977 ஆண்டு போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதன்தொடர்ச்சியாக 1980 முதல் 2016 வரை கோபிசெட்டிபாளையம் சட்டமன்றதொகுதியில் 7 முறை செங்கோட்டையன் வெற்றி பெற்று, எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். இதிலிருந்தே, தொகுதிக்குள் அவருக்கான செல்வாக்கைஉணர்ந்து கொள்ளலாம்.
இதில் 1991 முதல் 1996 வரை தமிழக போக்குவரத்துத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்துள்ளார். வேளாண்மைத்துறை அமைச்சர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மற்றும் வருவாய்துறை அமைச்சராக இருந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கே.ஏ.செங்கோட்டையன் 96,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.வி. சரவணன், 84,954வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில்அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட செங்கோட்டையனை எதிர்த்து திமுக சார்பில் ஜி.வி.மணிமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கே.சீதாலட்சுமி, அமமுக சார்பில் என்.கே.துளசிமணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் என்.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். என்றாலும் அதிமுக -திமுக இடையேதான் போட்டி கடுமையாக காணப்பட்டது.
இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாடார்கள் ஆகியோர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். மேலும் ஆதிதிராவிடர் சமூகத்தினர், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர்.
அடிக்கடி தொகுதி பக்கம் வந்து, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு, கூடிய வரையில் உடனே நிவர்த்தி செய்து கொடுப்பவர் என்ற நல்ல பெயர் இவருக்கு உண்டு. இருப்பினும் கழிவு நீர் பிரச்னை, குப்பைக்கிடங்கு பிரச்னை,விவசாய நிலங்களுக்கான மும்முனை மின்சார பிரச்னை, நெல்கொள்முதல் பிரச்னை எனப் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற புகார்கள்செங்கோட்டையனுக்கு மைனஸாக பார்க்கப்பட்டன.
இருந்தாலும் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து இவர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தீவிர மக்கள் பணி ஆற்றி வருகிறார். இருந்தாலும் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து இவர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தீவிர மக்கள் பணி ஆற்றி வருகிறார்.
இது இவருக்கு நிறையவே கை கொடுத்து வருகிறது எனவே எட்டாவது முறையும் இவர்தான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்று மக்கள் அடித்து சொல்கின்றனர்.