குப்புரா முவை ஆதரித்து நடிகை கௌதமி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
ராமநாதபுரம் மார்ச்-2
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி BJP வேட்பாளர் வழக்கறிஞர் குப்புரா முவை ஆதரித்து நடிகை கௌதமி தாமரை சின்னத்திற்கு சாத்தான்குளம், குயவன் குடி, மற்றும் மண்டபம் யூனியன் பகுதிகளுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர் மத்தியில் பேசியதாவது:-
எடப்பாடியார் அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த அதிமுக அரசு தொடர வேண்டும். அதிகமான நலத்திட்ட ங்களை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம் மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கும். ஆகவே நாமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வழக்கறிஞர் குப்பு ராமுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் R.G. மருதுபாண்டியன், அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெய்லாணி, பா.ஜ.க. பிரச்சார குழு தலைவர் தவமணி, BJP மேற்கு ஒன்றிய தலைவர் முருகேசன், BJP செய்தி தொடர்பாளர் குமரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி N.A ஜெரினா பானு