ஆடு அறுப்பதற்கு முன்பே ......... இரண்டும் எனக்கு தான்....?! அவசரப்படும் ஸ்டாலின் அணி.....

 ஆடு அறுப்பதற்கு முன்பே ......... இரண்டும் எனக்கு தான்....?! அவசரப்படும் ஸ்டாலின் அணி.....



பூட்டி வைத்துள்ள பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது இருந்தாலும் ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தங்களின் கருத்தை திணித்து வருகிறார்கள். 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இருந்தாலும் ஸ்டாலின் அணியை சேர்ந்தவர்கள் சற்றும் சலிக்காமல் எங்களுக்குத்தான் அடுத்த ஆட்சி அதிகாரம் என்கிற ரீதியில் தங்களின் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். 

இன்னும் கொஞ்சம் விட்டால் எடப்பாடியை சட்டையை பிடித்து கீழே தள்ளி விட்டு அந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும் அமர்ந்து விடுவார்கள் அந்த அளவுக்கு பதவி வெறியோடு அலைந்து கொண்டுள்ளனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

அதிமுகவினரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை எதுவாக இருந்தாலும் மே இரண்டாம் தேதி பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருக்கின்றனர்.

ஆனால் திமுகவினர் தினந்தோறும் வெளியிடுகின்ற செய்தி அடுத்து அரியணையை அவர்களுக்கான தாக தான் இருக்கின்றது

 அந்த வகையில், அடுத்து திமுதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் உறுதியாகி வருவதால், திமுக தலைமை லிஸ்ட்டுகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இதனால் 10 வருடங்களுக்கு பிறகு தொண்டர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்து வருகிறார்கள். 

 திமுக தலைமை அடுத்தடுத்த வேலைகளில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் 3 விதமான லிஸ்ட்கள் ரெடியாகிறதாம்..

அதிகாரிகள் பற்றின லிஸ்ட்.. இதில் உயர் அதிகாரிகள் யார்? யார்? திமுக ஆட்சியின் போது விசுவாசமாக செயல்பட்டவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியில் நேர்மையாக செயல்பட்டவர்கள் என்ற ரீதியில் இவை ரெடியாவதாக சொல்கிறார்கள்..

 சில அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாகவே திமுக தலைமைக்கு போன் போட்டு தங்கள் வாழ்த்துக்களை சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்களாம். அடுத்ததாக, அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ரெடியாகும் அளவுக்கு விவாதம் நடந்து வருகிறதாம்..

திமுக அமைச்சரவையில் கண்டிப்பாக செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வழங்கப்படும் என்கிறார்கள்.. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டபோதே, முக்கிய அமைச்சர்களை தோற்கடித்தால் அமைச்சரை பதவி என்று திமுக தலைமையில் ஒரு வாய்மொழி உத்தரவு சொல்லப்பட்டிருந்ததாம்.. அந்த வகையில், எம்ஆர் விஜயபாஸ்கர், ஓபிஎஸ் போன்றோரை தோற்கடிக்கவே செநிதல்பாலாஜி, தங்க தமிழ்செல்வனை களம் இறக்கப்பட்டது. 

தொகுதியில் இவர்கள் வெற்றி பெற்றால், அமைச்சர் பதவியும் நிச்சயம் என்ற சலசலப்பு எழுகிறது 

.சுப்புலட்சுமி ஜெகதீசன்

 மூன்றாவதாக, திமுக ஆட்சி அமைத்தால், யார் சபாநாயகர் என்ற ரீதியிலும் விவாதங்கள் நடந்து வருகிறதாம்.. அந்த வகையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 திமுகவில் சீனியர்.. திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராகவும், கைத்தறித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்...

இந்தமுறை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.. இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் சரஸ்வதி போட்டியிடுகிறார்... சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. தற்போது, சபாநாயகராக இவரை நியமிக்க பரிசீலனை நடந்து வருகிறது.. ஒருவேளை இவரை மட்டும் நியமனம் செய்தால், தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் பெறுவார்.. 

இது போன்று பல்வேறு செய்திகள் திமுக தரப்பில் இருந்து தினந்தோறும் வெளியாகி கொண்டுள்ளது. இது எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டது என்று தெரியவில்லை இருந்தாலும் இதுபோன்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளிவருவது திமுகவின் அரசியல் யுத்தம் என்று சொல்லலாம். 

போருக்கு இது சரி ஆனால் இப்போது போர் முடிந்துவிட்டது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற நிலையிலே போர்க்களம் இருக்கின்றது.

யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்து வைத்துள்ளனர் அதற்குள் என்ன அவசரம்....? தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் அடையாளம். அதை விடுத்து தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே தீர்மானிப்பதற்கு நீங்கள் என்ன எஜமானர்களா...? அப்படி என்றால் மக்கள் தீர்ப்புக்கு என்ன மரியாதை இருக்கின்றது...?

அதற்கு தேர்தல் என்று ஒன்று தேவையே இல்லையே...?

கிராமப்புறத்தில் பழமொழி ஒன்று சொல்வார்கள் ஆடு அறுப்பதற்கு முன்பாகவே ........... இரண்டும் எனக்குத்தான் என்பார்கள் அது போல் உள்ளது உங்கள் பேச்சும் செயலும் .

ஒருகால் படு தோல்வியை சந்தித்தால் என்ன செய்வீர்கள்....?

மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மக்களையும் மதிக்க வேண்டும் அப்போதுதான் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும்.