சாட்டையை சுழற்ற போகிறாராம் ......?!

 சாட்டையை சுழற்ற போகிறாராம் ......?!



இதுவரை இருந்த திமுகவின் பாணியே இந்த முறை தகர்த்தெறியப்படும் என்கிறார்கள்.. அப்படி ஒரு கண்டிப்பு, கறார் தன்மையுடன் ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவையை வைத்திருக்க முடிவு செய்துள்ளாராம்.. இந்த விஷயத்தில் ஸ்டாலின் சரியாகவே யோசித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. முன்பெல்லாம் திமுக அமைச்சர்கள் என்றால், அந்த ஆட்சி முடியும்வரை இவர்கள்தான் இருப்பார்கள்.. 5 வருடத்தில் இவர்களை கருணாநிதி மாற்றவே மாட்டார்.. புகார்கள் வந்தாலும் கூப்பிட்டு கண்டித்து எச்சரிப்பாரே தவிர, ஜெயலலிதா போல ஓவர்நைட்டில் பதவியை பிடுங்க மாட்டார்.

இப்போது திமுகவில் நிலைமை அப்படி இல்லை.. சற்று கண்டிப்பு தேவைப்படுகிறது.. மக்களும் விழிப்புடன் உள்ளனர்.. அதனால், யார் மீது புகார் வந்தாலும், சாட்டையை சுழட்ட போகிறாராம் ஸ்டாலின்.. இதன்மூலம், திமுக மீதான புகார்கள் இனி குறையும், அனைவரும் பயந்து இனி மக்களுக்காக வேலை பார்ப்பார்கள் என்று நம்பப்படுகிறதாம். இப்படியெல்லாம் பரபர தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும், மொதல்ல ரிசல்ட் வரட்டும், பிறகு பார்க்கலாம் என்ற குரல்களும் சேர்ந்தே எழுகின்றன..!

இந்த மேட்டரை ஸ்டாலின் இப்போது ஓபன் செய்ததற்கு பதில் தேர்தலுக்கு முன்பாகவே செய்து இருந்தால் ஓரளவுக்கு வாக்கு வங்கியை சரிக்கட்டி இருக்கலாம். மக்களும் ஸ்டாலின் பரவாயில்லையே கருணாநிதியை விட புதிதாக சிந்திக்கிறார் என்று யோசித்து இருப்பார்கள். அப்போது இந்த ஐடியா சொல்ல சரியான ஆள் இல்லை.

அப்போது அவருக்கு மத்திய அரசையும் மாநில அரசையும் குறைகூறுவது முழுநேர வேலையாக இருந்தது. இது மக்களிடையே ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தியது இதனால் திமுகவுக்கு ஆதரவான வாக்குகள் கூட எதிராக மாறிப்போனது.

இப்போதைய தமிழக அரசியல் சூழல்  ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை. இது அவர்கள் வெளியிட்டுவருகின்ற அறிக்கைகள் மற்றும் செய்திகளிலிருந்து தெரிகிறது.  அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நான்தான் ரவுடி என்பது போல் நாங்கள் தான் ஜெயிக்கிறோம் நாங்கள் தான் ஜெயிக்கிறோம் என்று பாவ்லா காட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்திற்கு தான் இப்படி பேசுவார்கள் அதற்கு பிறகு என்ன செய்ய முடியும் என்று கேட்பவரும் இருக்கிறார்கள்.

 முதலில் எதிர்க்கட்சி தலைவராக வர முடியுமா என்று பாருங்கள்.  மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர்.


Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்