2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் யாருக்கு சாதகம்.....? யாருக்கு பாதகம் .....? மக்களின் மனநிலை என்ன....?

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் யாருக்கு சாதகம்.....? யாருக்கு பாதகம் .....?

மக்களின் மனநிலை என்ன....?



2021 சட்டமன்ற தேர்தலை யார் எதிர்பார்த்தார்கள் இல்லையோ முகஸ்டாலின் அதிகமாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக திமுகவின் கையில் ஆட்சி அதிகாரம் இல்லை எனவே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டு உள்ளனர்.

ஜெயலலிதா கருணாநிதி என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் இது இதில் தான் தான் பெரிய ஆளுமை என்று கொண்டு மு க ஸ்டாலின் தான் தான் அடுத்த முதல்வர் என்கிற ரேஞ்சுக்கு சென்றுவிட்டார்.

இதற்காக அவர் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார் ஐ பேக் நிறுவனத்திடம் கட்சியை அடகு வைத்துவிட்டு அவர் சொல்வது போல் ஆடிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் வந்து போய்விட்டார்.



எதிர்த்தரப்பில் இவருக்கு போட்டியாக நிற்பது அதிமுகவின் இபிஎஸ் கமல் சீமான் டிடிவி தினகரன் விஜயகாந்த் என்று பலர் இருந்தாலும் இறுதியான போட்டி என்பது அதிமுக-திமுக இருவருக்கு மட்டுமே.

எடப்பாடி பழனிச்சாமி எதார்த்தமாக செயல்படுகிறார் அவர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடங்கி இன்றுவரை பல முனை தாக்குதல்களை தாங்குவது வரை எதிலும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

தற்போது அவர் முதல்வராக இருந்தாலும் தான் தான் அடுத்த முதல்வர் என்று ஒருபோதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை.

ஆனால் திமுகவின் முகஸ்டாலின் இந்த ஆட்சி இன்றைக்கு போய்விடும் நாளைக்கு போய்விடும் இன்னும் இரண்டே இரண்டு அமாவாசைகள் தான் என்று   

ஜெயலலிதா மரணத்த போதிலிருந்து சொல்லிக் கொண்டுள்ளார். இதற்கும் ஒரு படி மேலே சென்று அடுத்த ஆட்சி அமைப்பதற்கான முதல்வர் பதவி ஏற்பதற்கான நாளையும் குறித்து வைத்துள்ளார்.



ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று முடிவு மக்கள் கையில் இருக்கிறது என்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒழுங்காக செய்து கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த நான்காண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார். எல்லோரும் எளிதாக சந்திக்கும் மக்களின் முதல்வராகவ வளர்ந்துள்ளார்

இதுதான் இந்த இருபெரும் தலைவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம். 



இதில் என்ன ஒரு பெரிய வேறுபாடு என்று சொன்னால் இப்போது ஜெயலலிதாவின் அரசியலை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் பின்பற்றுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைய காலகட்டத்தில் ஆடம்பர ங்களுக்கு வரவேற்பு இல்லை. அமைதியாக செல்பவர்களுக்கு தான் ஆரவாரம் அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையே இரு பெரும் தலைவர்களையும் நிலைநிறுத்துவதற்கு வழிகாட்டியாக 

இருக்கிறது. இதில் யாருக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து கட்சிகளின் பலம் கூட்டணியின் பலம் என்று பார்த்தால் இரண்டு கூட்டணி களிலும் நிறைய கட்சிகள் இருக்கின்றன கலர் கலராக நிறைய கொடிகள் பறக்கின்றன இதில் யார் வலிமையானவர்கள் என்று பார்க்கவேண்டும்.



திமுகவை பொறுத்தவரை கலைஞர் மறைவிற்கு பிறகு பெரிய தலைகள் தொடங்கி தொண்டர்கள் வரை யாரும் புதிதாக கட்சியில் சேரவில்லை மாறாக கட்சியில் இருந்த முக்கிய புள்ளிகள் மற்றும் பெரும்பான்மையான தொண்டர்கள் பாஜக மற்றும் அதிமுகவில் சென்று 

இணைந்துள்ளனர். அதனால் திமுக கட்சி பலம் பெறவில்லை.

கூட்டணி கட்சிகளை எடுத்துக் கொண்டால் மதிமுக விடுதலை சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி என்று எந்த கட்சியும் தமிழகத்தில் பெரிதாக வளரவில்லை அவர்களின் வாக்குவங்கி நாளுக்கு நாள் சரிந்து கொண்டுள்ளதே தவிர உயரவில்லை.  ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து இன்னும் கீழே இறங்கி தான் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களுக்கு மிகவும் குறைவாக சீட்டுகளை வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் கட்சியில் குரல் கொடுப்பதற்காக இருந்த சில மூத்த தலைவர்களும் சோர்ந்து போய் விட்டார்கள் பலர் செத்துப் போய்விட்டார்கள். 

மொத்தத்தில் இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கூட 40 சதவீத வாக்குகளை வாங்குவது கடினம். இளைய தலைமுறையினரின் வாக்குகளை வாங்குவது கூட கடினம் அதை கவர்வதற்கு இவர்கள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

ஆனால் அதிமுக கூட்டணி அப்படியில்லை ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த கட்சி அமோகமாக வளர்ந்துள்ளது. ஜெயலலிதா இருந்த போதாவது இந்த கட்சியில் இரு வேறு பிரிவுகள் இருந்தது. ஆனால் இப்போது அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை. தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே நல்ல புரிதலும் நல்ல ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் நிலவுகின்றது. ஜெயலலிதா இருந்த போதாவது கட்சிக்குள் ஏற்பட்ட சில குழப்பங்களால் பல பெருந்தலைகள் கட்சியை விட்டு விலகி திமுகவில் சேர்ந்த கதைகளும் உண்டு. ஆனால் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரின் இணைப்பிற்கு பிறகு கட்சி நன்றாகவே பல பட்டுள்ளது. கட்சியை விட்டு வெளியே சென்ற பலர் மீண்டும் வந்து இணைந்துள்ளனர். தமிழகத்தில் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட இயக்கமாக அதிமுக வளர்ந்துள்ளது.

கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் குறிப்பிட்ட அளவிலான வாக்குவங்கி பெற்றுள்ளது. 10.5 சதவிகித வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வன்னியர்களை ஒருங்கிணைத்து உள்ளது. 

இதன் மூலம் வன்னியர் வாக்கு அன்னியருக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது பாமக இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற விட செய்யமாட்டோம் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சொல்ல சொல்ல அந்த கூட்டத்திலிருந்து தான் கொத்துக்கொத்தாக நிறைய பேர் பாஜகவில் வந்து இணைந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை விட பாஜக தமிழகத்தில் நன்றாகவே வளர்ந்துள்ளது . தமிழகமெங்கும் தாமரை பிரகாசமாக தெரிகின்றது.

பாஜக உடனான கூட்டு அதிமுக தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் வேட்டு என்று  திமுக சொல்வதை ஏற்பதற்கில்லை. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது என்று சொல்வதெல்லாம் பொய் பித்தலாட்டம். அது எதுவும் இந்த தேர்தலில் ஈடுபடப் போவதில்லை பாஜக விற்கான ஆதரவு வாக்குகளும் மத்திய அரசு மீதான நம்பிக்கைகள் பெருகி வருகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை இருந்தது உண்மைதான். அதற்குக் காரணம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான தகவல்கள். அப்போது மக்கள் அதை உண்மை என்று நம்பினார்கள் ஆனால் இப்போது அவர்கள் எந்தவிதமான தகவலை பரப்பினாலும் அதன் உண்மை தன்மை என்ன என்பதை அறிந்து உடனுக்குடன் எதிர்த்து பதி விடுவதால்  அவர்கள் பித்தலாட்டங்கள் அடுத்த நொடியே அவர்களின் சதி திட்டங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்படுகின்றன. அதனால் உண்மை எது பொய் எது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

2019 எம்பி தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணி 39 இடங்களை  பிடித்ததற்கு காரணம் அவர்களின் தேர்தல் அறிக்கை. அதில் அவர்கள் சொன்னது எல்லாம் செய்வார்கள் என்று மக்கள் நம்பி வாக்களித்தனர். அதனால் தான் அவர்களுக்கு அந்த வெற்றி கிடைத்தது. 

இந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது ஆனால் அவர்கள் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை அதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.  அதன் பாதிப்பு இந்த சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

அவர்கள் கடந்த எம்பி தேர்தலில் தோற்று இருந்தால் கண்டிப்பாக அதன் அனுதாபம் இந்த தேர்தலில் 

எதிரொலிக்கும்.

அவர்கள் ஜெயித்தும் ஒன்றும் செய்யாததால் அதன் பாதிப்பை இந்த தேர்தலில் உணர்வார்கள்.

இது ஒருபுறம் என்றால் எப்போதுமே திமுகவின் கதாநாயகன் கதாநாயகி என்று சொல்லப்படுகின்ற அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இம்முறை காமெடியனை விட கேவலமாக 

சென்றுவிட்டது. அந்த அறிக்கையில் மக்களுக்கு சாதகமாக உள்ள அம்சங்களை விட பாதகமாக உள்ள அம்சங்கள் தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஸ்டாலினின் ஏழு அம்ச திட்டம் ஆகட்டும் எதுவுமே கவர்ச்சி இருந்து காணப்படுகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் நன்றாக வேலை செய்கிறது.

மாதம் ஆறு விலையில்லா கேஸ் சிலிண்டர் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஊக்கத்தொகை விலையில்லா வாஷிங் மெஷின் விலையில்லா சோலார் அடுப்பு OAPக்கு மாதம் 2000 என்று தாய்குலத்தை கவர்கின்ற வகையில் அது அமைந்துள்ளது.

விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி ஆகியவை முதல்வர் எடப்பாடி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஸ்டாலின் வாயில்தான் படை சூடுவார் சொல்வார் ஆனால் செய்ய மாட்டார் ஆனால் எடப்பாடி யாரோ சொல்லாமலே செய்வார் என்கிற நம்பிக்கை மக்களிடம் வந்துள்ளது.

மக்களின் இந்த நம்பிக்கையை குறைக்கும் விதமாக இதை தனக்கான வாக்குகளாக மாற்றுவதற்காக. மு க ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்கிறான் என்று ரஜினி பட வசனத்தை சொல்லி தான் சொல்லி தான் எடப்பாடி இவற்றையெல்லாம் செய்தார் என்று சொல்லி ஊரான் வீட்டு பிள்ளைக்கு தன் பெயரை வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்.

இது எதுவும் இந்த தேர்தலில் ஈடுபடும் போவதில்லை ஏன் என்றால் இன்றைக்கு இங்குள்ள மக்கள் ஆண்டவனை விட அருணாச்சலத்தை தான் நம்புகின்றனர்.

ஸ்டாலின் என்னதான் ஒட்டுமொத்த ஊடகங்களின் விலைக்கு வாங்கி தனக்குத்தான் வெற்றி என்று கருத்துக்கணிப்பு போட்டு அடுத்த முதல்வர் தான் தான் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் அது அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது.

அதைவிட இன்னொரு முக்கிய விஷயம் இந்த தேர்தலில் பெரிய ஊடகங்கள் மீதான நம்பிக்கையை விட சமூக ஊடகங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. நான்கு பேர் அமர்ந்து கொண்டு பேசுகின்ற விவாதங்களை காட்டிலும் நாலாபுறமும் இருந்து வருகின்ற செய்திகளில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் நிலைக்கு மக்கள் 

தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே பெரிய ஊடகங்களில் கருத்து கணிப்புகள் எதுவும் இந்த தேர்தலில் பறிக்கப் போவதில்லை.

யார் நமக்கான முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

அமைதியாக நடக்கும் இந்த புரட்சிக்கான விடை மே இரண்டாம் தேதி தெரியும்.

அதுவரை காத்திருங்கள்....!

கே .ஆர் .ரவிச்சந்திரன். M.A.,

Journalist, Political Analyst

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்