அகில இந்திய அளவில் வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன் ராமநாதபுரம் பா.ஜ.க வேட்பாளர் குப்பு ராமு பேச்சு:-


அகில இந்திய அளவில் வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்: ராமநாதபுரம் பா.ஜ.க வேட்பாளர்  குப்பு ராமு பேச்சு:-



ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வழக்கறிஞர் குப்பு ராமு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மண்டபம் ஒன்றியம் ராமேஸ்வரம் தீவு பகுதியான பாம்பன் தங்கச்சிமடம், குந்து கால் போன்ற பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். சேது பூமியான ராமநாதபுரம் புண்ணிய பூமியாக விளங்குகிறது. அகில இந்திய புண்ணியத்தளமான ராமேஸ்வரம் இங்கு உள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் உதவியுடன் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இந்த தொகுதியில் மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்த உள்ளேன். இங்குள்ளவர்கள் பிழைப்பைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும்  நிலையை மாற்றி அமைத்து அவர்கள் இங்கேயே வருவாய் ஈட்டும் வகையில் வாய்ப்புகளை உருவாக்கித்தர மத்திய மோடி அரசால் மட்டுமே முடியும் அணு விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்துல்கலாமிற்கு ராமேஸ்வரத்தில் உலகம் வியக்கும் வகையில் மாபெரும் நினைவிடத்தை கட்டித் தந்து பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி 



ரூ.250 கோடி நிதியை 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தை  புதிதாக அமைப்பதற்கு வாரி வழங்கியவர் பிரதமர் மோடி மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரான எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் குப்பு ராமு பிரச்சாரத்திற்காக சென்ற இடங்களில் எல்லாம் கிராம மக்கள் கூடி நின்று குலவையிட்டு, மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அவருடன் அஇ அதிமுக முன்னாள் MP. அன்வர்ராஜா, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன், முன்னாள் மண்டபம் ஒன்றிய செயலாளர் முத்தாண்டி மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் 

M.N. அன்வர் அலி 

ஒளிப்பதிவாளர் 

N.A. ஜெரினா பானு