மூக்கில் விரல் வைத்து வியக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சி புரிந்து உள்ளோம் ; OPS, EPS கூட்டறிக்கை

மூக்கில் விரல் வைத்து வியக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சி புரிந்து உள்ளோம்  ; OPS, EPS  கூட்டறிக்கை



மூக்கில் விரல் வைக்கும் அளவுக்குச் சிறந்த ஆட்சியைக் கொடுத்துள்ளதாகவும் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்பதை தங்களின் அனுபவம் உணர்த்துவதாகவும் ஓபிஎஸ் &; ஈபிஎஸ் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக களமிறங்குகிறது. இதற்காக பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.ஓபிஎஸ் &; ஈபிஎஸ் கூட்டாக அறிக்கைஇந்நிலையில், இது அதிமுகவின் ஓங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஓங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று ஆரூடம் சொன்னார்கள். எடப்பாடி தலைமையிலான அரசு இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும் ஆறு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; தீபாவளிக்குள் போய்விடும் என்றும் சொன்னார்கள்.மூக்கில் விரல் வைக்கும் சிறந்த ஆட்சிஆனால், அவர்களின் மனக்கோட்டைகளைத் தகர்த்தெறிந்து, அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை மக்களுக்கு நாம் கொடுத்துள்ளோம். தற்போது தலை நிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம். அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. மூன்று புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப் பெருக்கு, ஒரு வறட்சிக் காலம் என்ற இயற்கைப் பேரிடர்கள் அனைத்தையும் வெற்றிகரமாகச் சமாளித்து நிவாரணப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டோம்.நாம் ஆற்றாத வளர்ச்சிப் பணிகள் உண்டா?உலகமே அஞ்சி நடுங்கி, செயலிழந்து, முடங்கிக் கிடக்கும் கொடிய கொரோனா பெருந்தொற்று நோயைச் சமாளித்து, போராடி, மக்களுக்கு இயன்ற வகைகளில் எல்லாம் உதவி செய்து, இன்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி பின்னும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு, வரலாற்றில் இடம்பெறும் அரசாக அதிமுக திகழ்கிறது. நாம் ஆற்றாத வளர்ச்சிப் பணிகள் உண்டா?அனுபவம் உணர்த்துகிறதுதமிழக மக்கள் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அளித்த தொடர் வெற்றியைப் போல, இப்பொழுதும் ஒரு மகத்தான வெற்றியை தர மக்கள் காத்திருக்கிறார்கள். இதை எங்களுடைய தேர்தல் பிரச்சாரப் பயணங்களில் நாங்கள் சந்திக்கும் மக்கள் கூட்டமும், அதன் எழுச்சியும் எடுத்துக்காட்டுகிறது. நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்த்துகிறது.வெற்றியை நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்பத்திரிகைகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகாரின் முடிகள் முற்றிலும் பொய்யாகப் போயுள்ளது நமக்குத் தெரியும். தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது அனைவரும் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடர் வெற்றிக்குத் தொய்வின்றி உழைப்போம். வெற்றி மாலையை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'