ஸ்டாலின் எடுக்க போகும் புது அதிரடி!
ஸ்டாலின் எடுக்க போகும் புது அதிரடி!


 ஐபேக் டீம் எடுத்த அடுத்த அதிரடி பற்றின ஒரு தகவல் கசிந்து வருகிறது.. அது உண்மையா என்று தெரியவில்லை.. ஆனால், திமுகவில் உள்ள சில மூத்த நிர்வாகிகள், சீனியர்கள் செம அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த முறை திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.. அதற்காகவே கட்சிக்குள் பலருடைய எதிர்ப்பையும் மீறி பிரசாந்த் கிஷோர் டீமை திமுக உள்ளே இறக்க உள்ளது. 10 வருடம் கழித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் என்றால், தங்களின் அனைத்து வியூகங்களுக்கும் ஒத்துழைப்பும், சம்மதமும் தர வேண்டும் என்று ஐபேக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு திமுக தலைமையும் சம்மதம் சொன்னதாகவும் செய்திகள் எப்போதோ வந்தன. 

இப்போதுவரை ஸ்டாலின் ஐபேக்கின் திட்டங்களின்படியும், வியூகங்களின்படியும்தான் செயல்பட்டு வருகிறார்.. ஐபேக்கின் ஒவ்வொரு நகர்வும், ஒருசில சீனியர்களை அப்செட்டாக்கி வருகிறது... மூத்த தலைகள் உட்பட சில மாவட்ட செயலாளர்கள்கூட அதிருப்தியில் உள்ளனர்.. கூட்டணி கட்சிகள் கையை பிசைந்து நிற்கின்றன. 

வெறும் வியூகங்களுடன் ஐபேக் தன்னுடைய ஆலோசனையை நிறுத்திவிடும் என்று பார்த்தால், அடிமடியிலேயே கை வைக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.. அதாவது வேட்பாளர் லிஸ்ட் பற்றின விஷயத்திலும் ஐபேக் கையில் எடுத்து வருவதாக சொல்கிறார்கள்.. 

 பொதுவாக, வேட்பாளர் என்றால் அதற்கு முன்பு, விண்ணப்பிப்பார்கள், பிறகு நேர்காணல் செய்வார்கள், அதற்கு பிறகு தொகுதியில் அந்த வேட்பாளருக்கான செல்வாக்கு, மக்களுக்கு செய்த நன்மைகள், இன்ன பிற விஷயங்களை பார்த்துதான், சீட் தருவது வழக்கம். ஆனால், இந்த முறை அப்படி இல்லை போலும். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? யார் யாருக்கு தகுதி இருக்கிறது என்று ஒரு லிஸ்ட் எடுக்கப்படுகிறதாம்.. அந்த லிஸ்ட்டை வைத்துதான், வேட்பாளர் தேர்வும் நடக்கும் என்கிறார்கள்... 

 அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரிடம் இருந்து லிஸ்ட் கேட்கப்படுகிறது.. இந்த லிஸ்ட்டில் இருந்து ஒரு பெஸ்ட் தேர்வாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இதை கேள்விப்பட்டுதான் பல மாவட்ட செயலாளர்கள், சில சீனியர்கள் ஷாக்கில் உள்ளனராம். ஏற்கனவே இருக்கும் செல்வாக்கை வைத்து, எப்படியாவது இந்த முறை தங்களின் வாரிசுகளை உள்ளே நுழைத்து, சீட் வாங்கிவிட பலரும் கனவில் இருந்து வரும் நிலையில், ஐபேக் இப்படி ஒரு ஐடியாவை எடுத்து வருவதாக சொல்கிறார்கள்.

இது உண்மையா? அல்லது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த ஐடியா சரிவருமா? என்று தெரியவில்லை.. ஆனால், இதுவரை ஐபேக் வகுத்த வியூகம் எதுவும் சோடை போகாமல் உள்ளதால், இந்த அதிரடியும் கை கொடுக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.. பார்ப்போம்..!