பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் இவை தான்? பின்னணி தகவல்!
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கூறிக்கொண்டிருக்கும் தேமுதிக அவ்வப்போது தனித்துப் போட்டியிடத் தயார் என்றும் பேசி வருகிறது.- இந்நிலையில் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகிக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியானது. “தமிழகம், புதுச்சேரி தேர்தல்களில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி மாலை 5 மணி வரை விருப்பமனு அளிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.