விபத்து ஏற்படாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசளிப்பு விழா

விபத்து ஏற்படாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசளிப்பு விழா. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் விபத்து ஏற்படாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசளிப்பு விழா.

         ஈரோடு மாநகராட்சியில் மாநகராட்சி இளங்கோவன் தலைமையில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ஊக்க பரிசாக 2000 மற்றும் சான்றிதழ் வழங்குதல் விழா நடைபெற்றது  இவ்விழாவில் குமரேசன், கொண்டல் ராஜ், ரமேஷ் ஆகியோருக்கு 2000 ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மேலும் லாரன்ஸ் ,சண்முகம், விஜயகுமார் ஆகிய ஓட்டுநர்களுக்கு 20 ஆண்டுகள் விபத்து ஏற்படாமல் பணி புரிந்ததற்காக அரசு சின்னம் பொருந்திய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார், நகராட்சி ஆணையாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார் மற்றும் நகராட்சி இளநிலை பொறியாளர் பிச்சைமுத்து நன்றியுரையாற்றினார்.