"விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்பு.

"விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்பு.பவானி சட்டமன்ற தொகுதியில் விடியலை நோக்கி" ஸ்டாலின் குரல் "தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுமக்கள் நெசவாளர்கள் இடம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றார், 

அந்தியூரில் இருந்து பவானி வரும் வழியில் சிலம்ப கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம் பகுதியில் பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற கனிமொழி அங்கு குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து பவானியில் மஞ்சள் பை உற்பத்தியாளர்கள், கைத்தறி நெசவு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 ஈரோடு வடக்கு மாவட்டம் தி.மு.க  செயலாளர் என். நல்லசிவம், பவானி நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெசவாளர்கள் ஜி.எஸ்.டி .வரி விதிப்பு ,நூல் விலை உயர்வு, அரசாங்கத்தின் கவனமின்மை போன்ற காரணங்களால் தங்களின் தொழிலிலும் அதை சார்ந்த வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என கனிமொழி அவர்களிடம் கூறினார்கள். 

நெசவாளர்களின் குறைகளை கேட்ட பின் கனிமொழி எம்.பி .பேசுகையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்னும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது மக்களை பார்க்கையில் மக்கள் நிம்மதியாக இல்லை எதிர்கால வாழ்க்கை  குறித்த நம்பிக்கை இல்லை இருள் சூழ்ந்து காணப்படும் அவர்களின் முகத்தில் எப்போது விடியும் என  ஏக்கத்தை பார்க்கமுடிகிறது 

பணமதிப்பிழப்பு நீக்கத்தால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது தொழில் முடங்கியது தங்களின் சுயநலத்திற்காகவும்  வழக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ஆட்சியை பாதுகாக்கவும் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்கள் பிரச்சனை விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை 

பொதுமக்கள் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கைகள் திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் வேதனையில் தவித்து வரும் மக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விடிவு காலம் பிறக்கும் என கூறினார்.

Yogeshwarii Erode: