பவானியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பவானி தளவாய் பேட்டையில் உள்ள மணல் பாலு என்கிற பாலமுருகன்(35) தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாக 1 1/4கிலோ கஞ்சாவை மறைத்து வைத்துள்ளார் தகவலறிந்த பவானி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் கஞ்சாவை பறிமுதல் செய்து மணல் பாலு வையும் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.