ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தொடர்பாக  முடிவு எடுக்காதது ஏன்..? உயர்நீதிமன்றம் கேள்வி..!


ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தொடர்பாக  முடிவு எடுக்காதது ஏன்..? உயர்நீதிமன்றம் கேள்வி..!





ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்நிலையில் மகன் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் விடுப்பு கோரி தாய் அறுபுதம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளகுக்கு கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு வழங்க தாய் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிறையில் 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 நவம்பரில் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் விடுப்பு தரப்பட்டதாக அரசு தரப்பு பதில் அளித்துள்ளது.




மீண்டும் 2 ஆண்டுக்கு பிறகு தான் பேரறிவாளனுக்கு பரோல் தர முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்று உயர்நீதிமன்றம் கூறப்பட்டுள்ளது.