வைரலாகி வரும் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல்கள்

வைரலாகி வரும் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல்கள்



கந்த சஷ்டி கவசத்தை பழித்து பேசுகிறேன் என்று பேசி ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் கருப்பர் கூட்டத்தினர்.


முருகனின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழ் கடவுள் முருகனாக வேடம் போட்ட மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும், முருகனைப் போற்றி ஜெயலலிதா பாடிய பாடலும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் நடித்த படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பக்திப்பாடலும் பாடியிருக்கிறார். மறைந்த வயலின் வித்வானும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில். ''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்...'' என்ற பாடலை ஜெயலலிதா பாடியுள்ளார்,


இந்தப்பாடல்தான் இப்போது வைரலாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியவர்கள் இப்போது சிறையில் இருக்கும் நிலையில் முருக பக்தர்கள் மட்டுமல்லாது தமிழ் கடவுளை போற்றுபவர்களும் கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கிளம்பியுள்ளனர்.


முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சாண்டோ சின்னப்பத்தேவர் படத்தில் முருகனாக நடித்திருப்பார். கையில் வேலும் கூடவே மயிலும் இருக்க முருகனாகவே மாறியிருப்பார். இந்த படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


ஸ்ரீதேவி குழந்தை முருகனாக நடிக்க அதன் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கும் அழகு படம் பலரது வீடுகளில் அலங்கரிக்கிறது. கந்தன் கருணை படத்தில் முருகனின் இணையாக வள்ளியாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இப்போது கந்த சஷ்டி கவசம் பாடல் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் படமும் அவர் பாடிய பாடலும் செம வைரலாகி வருகிறது.


ஜெயலிதா பாடிய முருகன் பாடல்தங்க மயில் ஏறி வரும் எங்க வடிவேலவன் என்ற பாடலில் முருகனின் பெருமைகளையும் பல சிறப்புக்களையும் போற்றி பாடியுள்ளார் ஜெயலலிதா. இந்தப்பாடலை இப்போது எல்லோரும் வைரலாக்கி வருகிறார்கள்.


முருகனுக்கு அரோகரோவெற்றிவேல் வீரவேல் என்ற வீர முழக்கம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனாது அஜீத் நடித்த பில்லா 2 திரைப்படத்தில், சேவல் கொடி பறக்குதடா என்ற பாடலும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. முருகனுக்கு எதிராக பேசினால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று சொல்லி வருகிறார்கள் முருக பக்தர்கள்.