ஐஐடி நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா? தமிழக அரசு விளக்கம்!
தமிழகத்தில் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் இருந்தால் தான் அனுமதிக்கப்படுவாரா என்கிற கேள்விக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இ-பாஸ் இன்றி எந்த ஒரு வாகனமும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாமல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூன் 24ம் தேதி ஐஐடி ஹைதெராபாத் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வினை எழுத வரும் மாணவர்கள் இ-பாஸ் வைத்திருக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாற்றாக மாணவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டினை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.