60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை திருணங்கள் தெரியுமா?

60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை திருணங்கள் தெரியுமா?




இந்த காலத்தில் இளைஞர்களுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது படித்துவிட்டு வேலை கிடைப்பது தான். அப்படியே வேலை கிடைத்து ஓரளவு சம்பாதித்து திருமணம் செய்வதற்குள் பலருக்கு வாழ்க்கையே வெறுத்து விடுகிறது. பலர் சரியான வருமானம் இல்லாததால் திருமணம் செய்ய முடிவதில்லை. சிலருக்கு நல்ல வருமானம், வசதி இருந்தும் திருமண வயது கடந்து சரியான பெண் அமையாமல் திண்டாடுகின்றார்.
 


அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் உறவினரின் திருமணத்திற்கே செல்ல தயங்குகின்றனர். அவர்கள் எப்படி 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்வார்கள்.

 

ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என கண்டிருப்பார்கள். அவர்களின் ஆசி வாங்கும் போது நம் தலைமுறையும் செழிக்கும் என்பது ஐதீகம்.

அப்படி திருமணத்தைச் செய்பவர்கள் ஆணின் தமிழ் பிறந்த தேதி ஆணின் பிறந்த நாள் தினத்தில் மனைவியுடன் திருமணம் நிகழ்வு செய்வதற்கு என்ன பெயர் என்பதைப் பார்ப்போம்...



1.) 55ஆவது வயது ஆரம்பமாகும் போது பீம சாந்தி வைபவம் (Bhima Shanthi Vaibhavam)

2.) 60ஆவது வயது ஆரம்பமாகும் போது உக்ரரத சாந்தி வைபவம் (
Ugra Ratha Shanthi Vaibhavam)
3.) 61ஆவது வயது ஆரம்பமாகும் போது ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம். (Sashtiapthapoorthi Vaibhavam)

4.) 70ஆவது வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி வைபவம் (Bhima Ratha Shanthi Vaibhavam)

5.) 72ஆவது வயது ஆரம்பமாகும் போது ரத சாந்தி வைபவம் ( Ratha Shanthi Vaibhavam)

6.) 78ஆவது வயதில் ஆரம்பமாகும் போது விஜய சாந்தி வைபவம் (Vijaya Shanthi Vaibhavam)

 

7.) 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்ல நாளில் - சதாபிஷேகம் வைபவம் (Sathabhishekam Vaibhavam)

8.) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால் - ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) வைபவம் (kanakabhishekam Vaibhavam)

9.) 85ஆவது முதல் 90க்குள் - ம்ருத்யுஞ்ஜய சாந்தி வைபவம் (Mrutyunjaya Shanthi Vaibhavam)

10.) 100ஆவது வயதில் சுபதினத்தில் கொண்டாடப்படுவது பூர்ணாபிஷேகம் வைபவம் (poorabhishekam Vaibhavam)


என்று  10 வகையான திருமணங்கள் உண்டு. இதை வாழ்க்கையில் ஒரு சிலரே கொண்டாடுகின்றனா். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை. முதல் திருமணத்திற்கே முக்கி முக்கி அழும் இக்கால இளைஞா்கள் இவ்வளவு திருமணங்களை எப்படி கொண்டாடுவா்கள்...?