ஜெயலலிதா இல்லம் நினைவு இல்லமாகிறது – தமிழக அரசு அவரச சட்டம்..!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் வீடான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு கையகப்படுத்தும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது நினைவு இல்லமாக மாற்ற அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தற்போது ஜெயலலிதா அவர்களின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆளுநர் அவர்களின் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வேதா இல்லத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என அனைத்தும் அரசுக்கு சொந்தமானதாக மாறுகிறது. இந்த அவசர சட்டத்தின் வாயிலாக புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைக்கப்பட்டு நினைவு இல்ல பணிகள் தொடங்க உள்ளது.