பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை May 16th. வெளியாகும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..?!

 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை  May 16th. வெளியாகும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..?!

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது மே 8-ந்தேதியே வெளியிடப்பட்டிருந்ததால், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகலாம் என எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 16ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் மே 16 பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.