ஓசூரில் ஆபரேஷன் சிந்துருக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்லாயிரக்கணக்கானோர் தேசியக்கொடியுடன் பங்கேற்ற ஆபரேஷன் சிந்துருக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி. கொட்டும் மழையிலும் நனைந்த வாரே பேரணியில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்கு முப்படைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மூவர்ண தேசிய கொடியை ஏந்தி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த பேரணியில் பங்கேற்க வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராம்நகர் பகுதியில் இருந்து துவங்கிய பேரணியில் பிஜேபி மாநிலச் செயலாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் பிஜேபி மாநில தலைவர் கே அண்ணாமலை, தேசிய செயலாளர் சுரேஷ் மேனன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
பேரணியானது, பழைய பெங்களூர் சாலை, மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, மற்றும் தாலுகா அலுவலகம் சாலை வழியாக காமராஜ் காலனியை வந்து அடைந்தது.
இதற்கிடையில் தாலுகா அலுவலக சாலையை வந்து அடைவதற்குள் கனமழை பெய்தது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை உள்ளிட்ட பிஜேபி நிர்வாகிகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக தேசிய கொடியை கையில் ஏந்தி ராணுவ நடவடிக்கைக்கும் ராணுவ வீரர்களுக்கும் மரியாதை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக சென்றனர்.
இந்தப் பேரணி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியை விட எழுச்சியுடனும் உண்மையான தேசபக்தியுடனும் நடைபெற்றது அனைவரையும் பிரமிக்க வைத்தது.
E. V. Palaniyappan. Hosur Reporter