11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது..?

 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது..?

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற மாணவர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5-ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,23,261 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கோடை விடுமுறை மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கியது.

தேர்வுகள் முடிந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி முடிவடைந்து, முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த ஆண்டில் மே 14ஆம் தேதியும், 2023ஆம் ஆண்டில் மே 19ஆம் தேதியும் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பொதுவாக, 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நாளன்றே 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் ஒன் தேர்வுகளை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில், அவர்கள் தங்களது. மதிப்பெண்களை tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் dge1.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்வையிட முடியும். தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35% மதிப்பெண் அவசியமாகும்.

https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.இதுதவிர தேர்வு முடிவுகள் செல்போன் எண்ணுக்கும், குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.