10th, +2 தேர்வு முடிவுகள் எப்போது...? சற்று முன் கிடைத்த தகவல்...!
+2 Result மே 9 தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முன்னரே இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையானது வரும் மே 5 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்வு முடிவுகள் லேட்டாக கிடைத்தால் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு இது பின்னடைவாக அமையும் என்பதால் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் 5ஆம் தேதி அல்லது 7ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 15 ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.