அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா? அவருக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி...?!

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா? அவருக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி...?!


தமிழக சட்டசபையில் நேற்றைய நிகழ்வு தொடங்கிய போது. அப்போது வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அதனை தொடர்ந்து, உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அப்போது, மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது. அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுவதாக அமைச்சர் ரகுபதி பேசினார்.

சட்டசபையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என்பது குறப்பிடத்தக்கது.

உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

அமலாக்கத்துறை வழக்கு காரணமாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வார் என்று கூறப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்யவேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாக செந்தில் பாலாஜி நீதிமன்றம் வழங்கும் கடுமையான தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இன்னும் இரண்டு மூன்று அமைச்சர்களின் விக்கட்டுகளும் விழும் என்பது தற்போதைய தமிழக அரசியல் நிலையாக உள்ளது.