80 வயது விவசாயி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வாங்கி அந்த நிலத்திற்கு போலீ வாரிசு சான்றிதழையும் வாங்கி பல லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி

 80 வயது விவசாயி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வாங்கி அந்த நிலத்திற்கு போலீ வாரிசு சான்றிதழையும் வாங்கி பல லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி

கிருஷ்ணகிரி அருகே உயிரோடு இருக்கும் 80 வயது விவசாயி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வாங்கி அந்த நிலத்திற்கு போலீ வாரிசு சான்றிதழையும் வாங்கி பல லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் மேலுமலை அடுத்த சின்னகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது விவசாயி கொண்டப்பன்.இவரது மகன் யுவராஜ் இவர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் 

 மேற்கண்ட கிராமத்தில் குடியிருக்கும் இவர்கள் இவரது தந்தையான கொண்டப்பனுக்கு  சூளகிரிசார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட இம்மிடிநாயக்கன் பள்ளி  கிராமத்தில் கிராமசர்வே எண் 217/1-ல் ஒருஏக்கர் 12 செண்டும்நிலமும் . 150/1-ல் 36 சென்ட் நிலமும் மொத்தம் ஒரு ஏக்கர் 48 சென்ட் நிலம் உள்ளதாகவும் தனது தந்தைக்கு தன்னுடன் சேர்ந்து நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகள் என ஆறு பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் சூளகிரி அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த திம்மன் என்கின்ற திம்மப்பன் . என்பவர் தனது தந்தையின் சொத்தை அவரிக்க அபகரிக்க திட்டம் போட்டு கடந்த 2005. ஆம் வருடம் உயிரோடு இருக்கும் தனது தந்தை கொண்டப்பன் இறந்து விட்டதாக ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் போலி இறப்புச் சான்றிதழ்  வாங்கியும் அவருக்கு ஒரே வாரிசு தான் தான் என திம்மன்போலியான வாரிசு சான்றிதழ் வாங்கியும் உள்ளார்.

 சட்டவிரோதமாக இரண்டு போலிச் சான்றிதழ்களை பெற்ற திம்மன் கடந்த 25-3-2015 ஆம் வருடம்  இவரது மகள் திம்மோஜி . மற்றும் உறவினர் முனிலட்சுமி ஆகியோருடன் இணைந்து சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கண்ட சொத்தை சட்டவிரோதமாக தனது பெயரில் கிரயம் செய்துள்ளார் 

 இந்த தகவல் தற்போது தங்களுக்கு தெரிய வரவே இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிப்பதாகவும்  தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து கிரையம் செய்துள்ள திம்மன் என்கின்ற திம்மப்பன் இவரது மகள் திம்மோஜி . முனிலட்சுமி . சூளகிரிஆவண எழுத்தாளர் குப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து போலியாக தயாரித்துள்ள நிலத்தின் கிரய பதிவேடுகளை தள்ளுபடி செய்து தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் கிடைக்க வழிவகை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

K. Moorthy Krishnagiri Reporter