கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த தினவிழா சிறப்பாக கொண்டாட்டம் :

 கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த தினவிழா சிறப்பாக கொண்டாட்டம் :

சிவகங்கை நகரில் இருந்து காளையார்கோவில் செல்லும்  சாலையில் ராணி வேலுநாச்சியாரின் மணிமண்டபம் உள்ளது. ராணி வேலுநாச்சியாரின் வரலாறு என்பது வடநாட்டு ஜான்சி ராணியின் வரலாற்றை விட முந்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக வெற்றிக் கொள்கை தலைவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் 295 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற இந்த பிறந்த தின விழா நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்டத் தலைவர் வடிவேல் தலைமையில் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த பிறந்த தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர தலைவர் சசிகுமார், நகரச் செயலாளர் அருள், கிழக்கு மாவட்ட விவசாய அணி தாமோதரன், பர்கூர் ஒன்றிய தலைவர் குஷி சிவா, காவேரிப்பட்டினம் நகர தலைவர் குமார், காவேரிப்பட்டினம் ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய மீனவர் அணி தலைவர் ரத்தினவேல், மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் நாகராஜன், வேப்பனப்பள்ளி ஒன்றிய தலைவர் பாக்கியராஜ், சூளகிரி ஒன்றிய தலைவர் சிவராஜ், கெலமங்கலம் ஒன்றிய தலைவர் முனிராஜ், மூர்த்தி, அஞ்செட்டி ஒன்றிய தலைவர் பட்டாபிராம், மேற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் பிரதீப், ஓசூர் மாநகர நிர்வாகிகளான தொல்காப்பியன், அன்வர் பாஷா, போச்சம்பள்ளி ஒன்றிய தலைவர் சபரி, மகளிர் அணி தீபா, மங்கம்மாள், இந்திரா, கோவிந்தி, சுபா, சங்கீதா, பாரதி, மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

K. Moorthy. District Reporter