பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பாகத்தை கேட்டதற்கு அடியாட்கள் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் ....

 பூர்வீக சொத்தில்  சேர வேண்டிய பாகத்தை கேட்டதற்கு அடியாட்கள்  கொண்டு  தாக்கி கொலை மிரட்டல் ....

கிருஷ்ணகிரி அருகே பூர்வீக சொத்தில் எனக்கு சேர வேண்டிய பாகத்தை கேட்டதற்கு அடியாட்கள்  கொண்டு  தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து உரிய பாதுகாப்பு கோரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுனைக் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள போத்திநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ்கடந்த 2006ம் ஆண்டில் போத்திநாயனப்பள்ளி கிராமத்தை சார்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஜரினா (எ) ஜமுனா என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார், இதன் மூலம் இவர்களுக்கு ராகுல், தருண் ஆகிய இரு மகன்கள் உள்ளனர், இதில் தருண் உடல் ஊனமுற்ற நினைவில் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தனக்கு சேர வேண்டிய பூர்விக சொத்தில் பங்கு கொடுக்காமல் உடன் பிறந்தவர்களான கல்பனா,பாக்கியலட்சுமி, ஆனந்த்,நிர்மலா ஆகியோர் முரண்டுபிடிப்பதோடு தங்களை தாக்கியதோடு அடியாள்கள் வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் தனது மனைவி குழந்தைளுடன் தனக்கு பாதுகாப்பு கேட்டும், பூர்விக சொத்தில் தனக்கு சேர வேண்டிய நிலத்தினை பெற்று தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை சந்தித்து புகார் மனுவினைக்கொடுத்தனர்,

இது குறித்து சுரேஷின் மனைவி ஜரினா (எ) ஜமுனா தெரிவிக்கையில் கலப்பு திருமணம் செய்துக்கொண்டதின் விளைவாக தனது கணவருடன் பிறந்தவர் பூர்விக சொத்தில் பங்கு கொடுக்காமல் தங்களை வீடு புகுந்து தாக்குவதோடு அடியாள்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர், ஏற்கனே மாற்றுதிறனாளி குழந்தையுடன் மிகவும் வறுமையில் வாடி வருகின்றோம், இந்த நிலையில்  கலப்பு திருமணம் செய்து கொண்டதினால் தனது கணருக்கு சேர வேண்டிய நிலத்தினை 

தரமறுக்கின்றனர், ஆகையால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசராணை மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பூர்வீக சொத்தில் சேரவேண்டிய பங்கினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

பேட்டி . ஜமுனா, சுரேஷின் மனைவி,

K. Moorthy Krishnagiri Reporter