எப்ப வேண்டுமனாலும் விழுந்து விடுவேன்என பரிதாபத்துடன் இயங்கி கொண்டு இருக்கும் டிரான்ஸ்பார்மரால்
கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகில் எப்ப வேண்டுமனாலும் விழுந்து விடுவேன்என பரிதாபத்துடன் இயங்கி கொண்டு இருக்கும் டிரான்ஸ்பார்மரால் பெரும் விபத்து நடந்து விடாமல் இருக்க உடனடியாக சரி செய்திட வழியுறுத்தி சமுக நுகர்வோர் பாது காப்பு நலச்சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மின்வாரிய மேற்பார்வைபொறியாளரை சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
..........................................................
கிருஷ்ணகிரி சென்னை சாலை பெரிய மாரியம்மன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் உடன்
மின் கம்பம் உள்ளது, சிமெண்ட் மின் கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் விழும் நிலையில் சிமெண்ட் மின்கம்பங்கள் உள்ளது,
மழை மற்றும் காற்று காலங்களில் வேகமாக காற்று வீசினால் டிரான்ஸ்பார்மர்
எப்பவேண்டுமனாலும் விழுந்து விடுவேன் என பரிதாபத்துடன் இயங்கி கொண்டு இருக்கும் டிரான்ஸ்பார்மரால் பெரும் விபத்து நடந்து விடுமே என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடேயே எழுந்துள்ளது,
மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் அருகில் கோவில் வீடுகள், கடைகள் அதிக அளவில் இருப்பதால் எந்த நேரமும் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்,
இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன் எப்ப வேண்டுமனாலும் விழுந்து விடுவேன் என்ற மரண எச்சரிக்கையுடன் காட்சியளிக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி புதியதாக அமைத்திட வழியுறுத்தி சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலசங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமாரை
சந்தித்து கோரிக்கை மனுவினைக்
கெடுத்தபின் கூறுகையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த டிராஸ்பார்மரால் மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அருகில் இருப்பதால்
தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செய்வார்கள், மட்டுமின்றி ஏராளமான வீடுகளும் கடைகளும் உள்ளது.
ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் காட்சியளிக்கும் இந்த கொலைக்கார டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிய டிரான்ஸ்பார் அமைக்க வேண்டும் என டாக்டர் சந்திரமோகன் கோரிக்கை விடுத்தனர்.
K moorthy Krishnagiri Reporter