சென்னையை தலைகீழாக மாற்றும் பலே திட்டம்...! பிரதமர் மோடி செய்யும் மாயாஜாலம்...!!

 சென்னையை தலைகீழாக மாற்றும் பலே திட்டம்...!  பிரதமர் மோடி செய்யும் மாயாஜாலம்...!!

இந்தியா உற்பத்தி நாடாக மாறி வரும் வேளையில் தனது கப்பல் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதைத் தாண்டி, குறைவான செலவில் இயக்கும் முறையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் எப்போதும் புதிதாகப் பதவியேற்கும் இந்தியப் பிரதமர் அண்டை நாடுகளுக்கு முதல் முறையாக அரசு பயணம் மேற்கொள்வது வழக்கம், ஆனால் இந்த வழக்கத்தை உடைத்து நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தற்போது நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்றிய பின்பு ரஷ்யா-வுக்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ளார்.இந்த பயணத்தில் மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுவது சென்னை-விளாடிவோஸ்டோக் கடல்வழி சரக்கு போக்குவரத்து பாதையைச் செயல்படுத்துவதற்கும், வளர்க்கவும் இரு நாடுகள் எடுக்கப்போகும் முக்கியமான நடவடிக்கை தான். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல், சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, 10,300 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சென்னை - விளாடிவோஸ்டாக் (Vladivostok) கடல் வழித்தடத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இந்த வழித்தடம், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் முக்கிய நகரமான விளாடிவோஸ்டாக் (Vladivostok) துறைமுகத்தையும், இந்தியாவின் தென்கிழக்கு துறைமுக ஹப் ஆக இருக்கும் சென்னையை இணைக்கும்.

இந்த கடல்வழி சரக்கு போக்குவரத்தை இந்தியா - ரஷ்யா நாடுகள் மத்தியிலான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தம் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கடல் வழித்தடம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்மொழியப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவில் விளாடிவோஸ்டாக்கில் (Vladivostok) நடந்த Eastern Economic Forum கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வேளையில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கும் இடையே கடல் வழித்தடம் அமைக்கப்படும்.

இதன் மூலம், நிலக்கரி, எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள், கொள்கலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகத்தில் ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிற சரக்குகளையும் இந்த வழித்தடம் வாயிலாகக் கையாளும். மேலும், இந்த வழித்தடத்தில், ரஷ்யாவின் பிற துறைமுகங்கள் மற்றும் சர்வதேச துறைமுகங்களிலும் கப்பல்கள் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணமாகச் சென்னையில் துவங்கும் இந்த வழித்தடம் தாய்லாந்து வழியாக மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா, விளாடிவோஸ்டாக் வரை நீள்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2022 ஆம் ஆண்டு வரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, உக்ரைன் போர் வெடித்த காரணத்தால் இதுகுறித்த பேச்சுவார்த்தை மொத்தமாக மூடியது. இந்த நிலையில் மோடியின் ரஷ்ய பயணம் மூலம் தற்போது இந்த வழித்தடம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இந்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி, கிழக்கு கடல் வழித்தடத்தைச் செயல்படுத்துவது குறித்த இந்திய-ரஷ்ய கருத்தரங்கு (India-Russia Workshop on Operationalisation of the Eastern Maritime Corridor) சென்னையில் நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் கிழக்கு நகரம் மற்றும் ஆர்க்டிக் மேம்பாட்டுக்கான துணை அமைச்சர் அனடோலி போப்ரகோவ் (Anatoly Bobrakov) கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், சுயஸ் கால்வாய் வழியாகச் சரக்குகள் ரஷ்யாவைச் சென்றடைய 40 நாட்கள் ஆகிறது. ஆனால், கிழக்கு கடல் வழித்தடம் வழியாக இந்த நேரம் 40% குறைக்கப்பட்டு 24 நாட்களில் பொருட்கள் வந்து சேரும் என்று கூறினார். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் சுயஸ் கால்வாய் வழித்தடத்தை விட கிழக்கு கடல் வழித்தடம் 5,608 கிலோமீட்டர் குறைவாக இருப்பதால் சரக்கு போக்குவரத்து கட்டணம் பெரிய அளவில் குறையும், இதனால் சீப்பான விலையில் பொருட்களைப் பெற முடியும் என தெரிவித்தார். இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை முக்கிய துறைமுகமாக மாறுவது மட்டும் அல்லாமல் சுமார் 10 நாடுகளில் இருந்து பொருட்கள் குறைந்த கட்டணத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் சென்னையில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி ஆகியவை அதிகரிக்கும்.

இவ்வளவு அதிசயங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள் நடந்தாலும் மோடி ஒன்றுமே செய்யவில்லை என்கிற புலம்பல்கள் தான் பொய் பிரச்சாரம் தான் இங்கு நடக்கும்.

அவர் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற உடன் தனது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்தபோது திரும்பவும் உலகம் சுற்ற ஆரம்பித்து விட்டார் என்று நக்கல் அடித்து பேசிய வாய்களை என்னவென்று சொல்வது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கொடுக்காத போதும் இவ்வளவு செய்யும் பிரதமர் மோடியை இனியாவது இகழாமல் இருப்பார்களா....?