மாநில கல்விக் கொள்கை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் : 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக்கூடாது, .5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம்

மாநில கல்விக் கொள்கை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் :  3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக்கூடாது, .5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம்  

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழுவானது சுமார் 2 வருடங்களாக பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென உருவாக்கப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள்,

*3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக் கூடாது.


*12ம் வகுப்பு மட்டுமின்றி 11ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த வேண்டும்.


*நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.


*ஆங்கிலம், தமிழ் என இருமொழிக் கல்வி பின்பற்றப்பட வேண்டும்.


*கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.


*எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.


*கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.


*சிபிஎஸ்சி, Deemed University அகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைபதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.


*5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்.


*1ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.

தமிழ் பல்கலைகழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.


தமிழ் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும், ஆராய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.


இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆட்சியர் தலைமையில், 1 மனநல ஆலோசகர், 1சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1 உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம்.


தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படும்.


என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையடுத்து, மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை மீது பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.


 அதன்பிறகு தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.