கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் தேமுதிக சார்பில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்

 கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் தேமுதிக சார்பில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி,ஜுன்.26 - கிருஷ்ணகிரி மாவட்டம் தேமுதிக சார்பில்  கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில்  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்தும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.சீனிவாசன் தலைமையில் கழக உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினார். மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம். முருகேசன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர். என்.ராமலிங்கம், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் எம். முருகேசன் ஆகியோர் முன்னில வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சின்னராஜ், தேமுதிக நிர்காகி எம்.சங்கர், மாவட்ட பொருளாளர் சாந்தி கே.சங்கர், மாவட்ட துணைச் செயலாளர்கள் எல்.முருகன், வேடியப்பன், சதீஷ்  ஆகியோர் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினார்கள். ஒன்றிய கழக செயலாளர் பர்கூர் வடக்கு கே.வி.கோவிந்தராஜ், மத்தூர் கிழக்கு டி. சந்திரசேகர், மேற்கு ஆர் விவேகானந்தன் கிருஷ்ணகிரி கிழக்கு எம். முருகன், மேற்கு வஜ்ஜிரவேல், காவேரிப்பட்டினம் விஜய் வல்லரசு, காவேரிப்பட்டினம் பொருளாளர் பி.சி.கக்கன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ. பி. காமராஜ், ஆர். கணேசன், உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக நகர கழக செயலாளர் ஆர்.  ரவி நன்றி கூறினார்.

K. Moorthy Krishnagiri Reporter