கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளித்து தற்கொலைக்கு முயற்சி....!?

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு  தீ குளித்து தற்கொலைக்கு  முயற்சி....!?

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக  நிலத்தினை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததையொட்டி பாதிக்கப்பட்ட பெண் தனது இரு குழந்தைகளுடன் மண்ணெண்ணை ஊற்றி தீ குளித்து தற்கொலைக்கு முயன்றவர்களை சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் 

டாக்டர் சந்திரமோகன் தடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திட வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

..............................................

கிருஷ்ணகிரி மாவட்டம் டேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேன் துர்க்கம் கிராமத்தை  சேர்தவர் மணிமேகலை கணவரால் கைவிடப்பட்ட நிலையில் அவர் தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்,

இந்த நிலையில் மணிமேகலை வீட்டின் அருகாமையில் உள்ள அரசு புறம்போக்கு நிலமானஅரை சென்ட் நிலத்தினை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மாரப்பா மற்றும் அவரின் கூட்டாளியான ராமசந்திரப்பா ஆசிய இருவரும் இணைந்து மணிமேகலை பயன்படுத்தி வந்த அரை சென்று நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து தட்டிகேட்டால் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயன்படுத்தி வந்த நிலத்தினை பட்டுத் தரக்கோரி பல முறை காவல் நிலையத்தில் புகார் மனுவினைக்கொடுத்துள்ளார்,

ஆனால் இதுவரை காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததால் விரக்தியடைந்த மணிமேகலை தனது மகள் மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக மண்ணெண்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளர்..

அப்போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் 

டாக்டர் சந்திரமோகன் மற்றும் காவல் துறையினர் தீ குளிக்க முற்பட்ட மூன்று பேரையும் காப்பற்றி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திட வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அப்போது கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரை சென்ட் நிலத்தினை மாரப்பா மற்றும் ராமசந்திரப்பா ஆகிய இருவரும் ஆசிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிந்தார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பாக புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து குழந்தைகளுடன் தீ குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில்  சிறிது நேரம்  பரப்பரப்பினை ஏற்படுத்தியது.

K. Moorthy Krishnagiri Reporter