கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 

கிருஷ்ணகிரி,ஜுன்.26- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் க. கிருஷ்ணசாமி  ஆலோசனின் பேரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  குடித்து உயிரிழந்ததை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் மு. மாரி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும், கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தாத தமிழக அரசை பதவி விலக வேண்டும் என பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் டி. சிவா, மாவட்ட பொருப்பாளர் என். கலைதீபன், பர்கூர் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் சரவணன் ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொறுப்பாளர் ஜோசப், தேன்கனிக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் சரவணன், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் படையப்பன், கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், பர்கூர் மகளிர் அணி செயலாளர் காஞ்சனா சந்திரசேகர், மத்தூர் ஒன்றிய செயலாளர் கணபதி, வேப்பனப்பள்ளி தொகுதி  செயலாளர் பா.அப்பாதுரை, வேப்பனப்பள்ளி ஒன்றிய இளைஞரணி ரகுவரன்,  முருகன், சூளகிரி ஒன்றிய செயலாளர் அருண்குமார், வேப்பனப்பள்ளி மகளிர் அணி செயலாளர் சுகுணா, தளி ஒன்றிய செயலாளர் ரஜினி, ஒசூர் ஒன்றிய செயலாளர் பழனி, கெல்லமங்கலம் ஒன்றிய செயலாளர் முனிராஜ், அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் செல்வம், பர்கூர் மகளிர் அணி செயலாளர் கவிதா, ஒசூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலிஜான் உள்பட 100-க்கும் மேற்பட்ட  ஆண்கள் பெண்கள்  ஏராளமான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

K. Moorthy Krishnagiri Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்