திமுக செயற்குழு மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 கிருஷ்ணகிரி அருகே தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயற்குழு மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி,மே.26- கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் அர. சக்கரபாணி, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நாமக்கல் பார்.இளங்கோ, பாராளுமன்ற வேட்பாளர் கோபிநாத் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வெற்றிச் செல்வன், பர்கூர் தொகுதி பொறுப்பாளர் பீ. டி. அன்பரசன்,மாவட்ட துணைத் தலைவர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், செயற்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ்  மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் ஊத்தங்கரை மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி,மத்தூர் ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு,பர்கூர் அறிஞர் வி.ஜி.ராஜேந்திரன், பாலாஜி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

K. Moorthy Krishnagiri Reporter