சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

சிவப்பு நிற நம்பர்  பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

சாலையில் மஞ்சள்,  வெள்ளை,  சிவப்பு,  பச்சை என பல வண்ணங்களில் வாகன நம்பர் பிளேட்களை தினமும் பார்க்கிறோம். இந்த வண்ண நம்பர் பிளேட்டுகள் குறிப்பது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Vehicle Number plates
1/7
இந்தியாவில் இந்த நம்பர் பிளேட்டுகளுக்கென சில அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாட்டுகளுடன் ஓட்டுவதற்கு தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
வெள்ளை நிற எண் பலகை: தனியார் வாகனம் / சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய வாகனம். இதனை வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது.
Vehicle Number plates
3/7
மஞ்சள் நிற எண் பலகை: வாடகை மற்றும் வியாபார ரீதியிலான வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய டாக்ஸி, ட்ரக்குகள் போன்ற வாகனம். வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது இதற்கென தனி டிரைவிங் பெர்மிட் அவசியமாகும்.
கருப்பு நிற எண் பலகை: வாடகைக்கு எடுப்பவரே சொந்தமாக ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனம். இதுவும் வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனங்களாகும். தற்காலிக பதிவு எண் கொண்ட வாகனமும் சிவப்பு நிற எண் பலகையுடன் இருக்கும். இது ஒரு மாதத்திற்கு செல்லத்தக்கது.
Vehicle Number plates
5/7
சிவப்பு நிற எண் பலகை: குடியரசு தலைவர், ஆளுநர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் வாகனம். தற்காலிக பதிவு எண் கொண்ட வாகனமும் சிவப்பு நிற எண் பலகையுடன் இருக்கும். இது ஒரு மாதத்திற்கு செல்லத்தக்கது.
Vehicle Number plates
6/7
பச்சை நிற எண் பலகை: மின்சார வாகனம். வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் தனியார் வாகனம், மஞ்சள் எழுத்துக்கள் இருந்தால் அது வணிக வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனம். நீல நிற எண் பலகை: வெளிநாட்டு தூதரக வாகனம்.