கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி. நரசிம்மன் வெற்றி பெற செங்கோலுக்கு சிறப்பு பூஜை

 கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி. நரசிம்மன் வெற்றி பெற செங்கோலுக்கு சிறப்பு பூஜை 

கிருஷ்ணகிரி,ஏப். 5- கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் தேர்தல் அலுவலகத்தில் தாமரை சின்னம்  வெற்றி பெற கோயமுத்தூரில் இருந்து செங்கோல் வரவழைக்கப்பட்டு, செங்கோலுக்கு சிவனடியார்களால் பூஜை செய்யப்பட்டு, அந்த செங்கோல் கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.நரசிம்மன் தேர்தல் அலுவலகத்தில் தமிழக இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தலைமையில் வேட்பாளர் சி. நரசிம்மன்  வெற்றி பெற செங்கோலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில்  தெய்வீக பேரவை ஹிந்து மக்கள் கட்சி மாநில நிறுவன தலைவர், தென்பெண்ணை ஆறு பாதுகாப்பு மக்கள் இயக்கம் மாநில தலைவர், வள்ளிமலை ஆதீன தெய்வீக பேரவை மாநில தலைவர் சிவத்திரு ஜி. அசோக், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், மாவட்ட பொருளாளர் கவியரசு, முன்னாள் மாவட்ட தலைவர் கொ. தர்மலிங்கம்,மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடாஜலபதி  உள்பட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வேட்பாளர் சி. நரசிம்மன் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

Moorthy Krishnagiri Reporter