கணேசமூர்த்தி தற்கொலைக்கு ஸ்டாலின்... வைகோ.... காரணமா...?!

 கணேசமூர்த்தி  தற்கொலைக்கு ஸ்டாலின்...  வைகோ....  காரணமா...?!

மதிமுக கணேசமூர்த்தியின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தமிழகத்துக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அதேசமயம், சர்ச்சையையும், சந்தேகங்களையும் உலுக்கி விட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவை அடிக்கடி சந்தித்துப் பேசுமளவு, கணேசமூர்த்தி நெருங்கி பழகிய அபிமானியாகவும் இருந்திருக்கிறார்.. கணேசமூர்த்தியின் போராட்ட குணமும், தீவிரமான செயல்பாடுகளும், கலைஞர் கருணாநிதியை அன்றே ஈர்த்திருக்கிறது . அதனால்தான், மாணவரணியில் கணேசமூர்த்திக்கு பதவி தந்து அழகு பார்த்துள்ளார் கலைஞர்.

திமுக மாணவர் அணியில் இருந்தபோதுதான், வை.கோபால்சாமி என்று அன்றைய நாட்களில் அனைவராலும் அறியப்பட்ட வைகோவின் நட்பும் கல்லூரி காலத்திலேயே கிடைத்திருக்கிறது..

சட்டக்கல்லூரி தேர்தல் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்வரை, இளம்சிங்கங்களான வைகோ, கணேசமூர்த்தியின் கர்ஜனையை கண்டு இளைஞர் கூட்டமே சிலிர்த்துள்ளது.. அதிலும் பொடா சட்டத்தின் சிறைவாசம், வைகோவுடனான நெருக்கத்தை கணேசமூர்த்திக்கு இன்னும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். முக்கிய தலைவர்களை சந்திக்கும்போதெல்லாம் வைகோ, தன்னுடன் கணேசமூர்த்தியைத்தான் அழைத்து செல்வாராம்..

வைகோ உள்ளிட்ட மதிமுகவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் தோல்வியுற்றபோதும்கூட, மதிமுக சார்பில் வெற்றி கொடியை நாட்டியவர் கணேசமூர்த்தி. அப்படிப்பட்ட கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் நிர்வாகிகள். சீட் கிடைக்காததால்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று குழம்பி போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.

செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், "கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர்.

இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய நினைத்தேன்.

 அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருவதால், ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கிவிட்டு, பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கி தரலாம் என்றிருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன்" என்கிறார் வைகோ.

 இப்படிப்பட்ட சூழலில், தமிழிசை சவுந்தராஜனின் குற்றச்சாட்டு பகீரை கிளப்பிவருகிறது..

 "வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் என்றுதான் பிரதமர் மோடி சொல்லி வருகிறார். நன்றாக பணியாற்றிய மதிமுக எம்பியை, வாரிசு அரசியல் படுகொலை செய்திருக்கிறது.

குடும்ப ஆசை, வாரிசு ஆசைதான் இந்த மரணத்துக்கு காரணம். அனுபவம் வாய்ந்த எம்பியை மகனுக்கு சீட் கொடுத்ததன் மூலம் வைகோ படுகொலை செய்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம். உலகத்தில் எங்கேயும் நடக்காதது.

ஒரு எம்பி தற்கொலை செய்வது என்பது தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம். முதலில் திராவிட கட்சிகளில் வாரிசு அரசியல் ஒழியட்டும். அதற்கு பிறகு பாஜகவின் ஜனநாயகத்தை பற்றி அந்த கட்சிகள் விமர்சிக்கட்டும்" என்று தமிழிசை ஆவேசமாக கூறியிருக்கிறார்.

இதனிடையே, நிர்வாகிகள் தரப்பில் வேறுவிதமாக கூறப்படுகிறது.. "துரை வைகோவை கட்சியில், முன்னிலைப்படுத்தப்பட்ட பிறகு, கட்சித்தலைமை எடுக்கும் முடிவுகள் குறித்து கணேசமூர்த்தியிடம் ஆலோசனை எதுவுமே பெறப்படவில்லை. தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற ஆதங்கமும் அவருக்குள் இருந்தது.

எம்பி தேர்தல் முதல்கட்ட பேச்சுவார்த்தையில், ஈரோடு தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மதிமுகவுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதால், ஈரோடுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

இது தெரிந்த கணேசமூர்த்தி, "திமுக ஈரோடு தொகுதியை கொடுக்க முன்வந்தும், அதை மறுத்தது ஏன்?" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.. இதுதொடர்பாக வைகோ தன்னிடம் பேசவில்லை என்றும் வருத்தப்பட்டார்..

அதுமட்டுமல்ல, மாவட்ட நிர்வாகிகளிடம் சரியாக நெருங்கி பழகாதது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியை மறுபடியும் சேர்க்க பரிந்துரைத்தும், அதை தலைமை ஏற்காதது என பல காரணங்களாலும் கணேசமூர்த்தி அதிருப்தியில் இருந்தார்.

கடந்த 22-ம் தேதி ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் அறிமுகக்கூட்டத்தில், கணேசமூர்த்தி பங்கேற்றபோது, கட்சி கரை வேட்டியை தவிர்த்துவிட்டு, கரை இல்லாத வேட்டியை அணிந்து வந்திருந்தார். இனி மதிமுகவில்பயணிக்க முடியாது என்று அங்கிருந்த நண்பரிடமும் கணேசமூர்த்தி சொல்லியிருக்கிறார்.. ஒருவேளை அவரது டைரி குறிப்புகளை ஆராய்ந்தால், தற்கொலைக்கான காரணம் இருக்கலாம்" என்கிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே கணேசமூர்த்தி, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கட்சியினர் சொன்னாலும், இப்படி ஒரு முடிவை எடுக்க உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.. குடும்ப சூழலா? அல்லது தமிழிசை சொல்லும் காரணமா? அல்லது நண்பர்கள் சொல்லும் காரணமா? எதுவென்று உறுதியாக தெரியவில்லை.

ஆனால், இரும்பு போன்ற மன உறுதியும், துணிச்சலும் கொண்ட ஆளுமை, தற்கொலை செய்யும் அளவுக்கு துணிவாரா? என்ற கேள்வியை எஞ்சி நிற்கிறது.. எப்படிப்பார்த்தாலும், மிகச்சிறந்த மனிதரை இந்த தமிழகம் இழந்துள்ளது மறுக்க முடியாத உண்மை!

நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ். இடம்  கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தை பெரிய அரசியல்  ஆக்கிய அயோக்கியர்கள்....  விபச்சார ஊடகவியலாளர்கள்.... எம் பி சீட் கிடைக்காத காரணத்தால்  தற்கொலை செய்து கொண்ட  முதுபெரும் தலைவரின் மரணத்தை அசிங்கப்படுத்தி விட்டார்களே என்கிற மாபெரும் கேள்விதான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.

 இதே சம்பவம் வேறொரு  கூட்டணியில் நடந்து இருந்தால்  திமுக கூட்டணியில் இருக்கிற கபோதிகள் எப்படி எல்லாம் கத்தியிருப்பார்கள்.....  எப்படி எல்லாம் தரம்  தாழ்ந்து விமர்சித்து இருப்பார்கள் என்பதை  இதை வைத்து எப்படி எல்லாம் அரசியல் ஆக்கிருப்பார்கள் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 கணேச மூர்த்தி ஆன்மா இவர்களை மன்னிக்காது.  தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள்......