ஆர். டி. இ இரண்டாண்டு கல்வி கட்டண பாக்கி.. தொடர் அங்கீகாரம் இன்ன பிற பிரச்சனைகளுக்காக

 ஆர். டி. இ இரண்டாண்டு கல்வி கட்டண பாக்கி.. தொடர் அங்கீகாரம் இன்ன பிற பிரச்சனைகளுக்காக

ஆர். டி. இ இரண்டாண்டு கல்வி கட்டண பாக்கி.. தொடர் அங்கீகாரம் இன்ன பிற பிரச்சனைகளுக்காக நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது...

 சங்கத் தலைவர்கள் மற்றும்  பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு...

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வருகின்ற 29ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம் முன்பு தனியார் பள்ளிகளின் மிக முக்கியமான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி  நடைபெற இருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது....

 அன்று காலை சரியாக 11 மணிக்கு  தனியார் பள்ளிகள் இயக்குனர் அவர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர். ஏ. கனகராஜ் அவர்கள் தலைமையில்  நேரடியாக நமது சங்கத் தலைவர்கள் நமது நியாயமான  கோரிக்கைகளை விளக்கி பேசி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகள் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்...

 எனவே 29ஆம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு  ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது...

 பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர்கள் அவரவர்கள் பணியை அவரவர்கள் சிறப்பாக செய்து நடைபெற உள்ள பொதுத்தேர்வில்  100% வெற்றியை பெற்று 100% மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கல்வி கட்டணம் பாக்கி இல்லாமல் வசூல் செய்து உங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தலைசிறந்த பள்ளிகளை தொடர்ந்து நடத்துங்கள்...

 அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒற்றுமையோடு மாநில சங்கத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றுங்கள் உங்களுக்காக என்றும் உழைத்திட நாங்கள் காத்திருக்கிறோம்....

மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டும் 29ஆம் தேதி காலை சரியாக 11 மணிக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகத்திற்கு  நேரில் வர வேண்டும்.

 நன்றியுடன்...உங்கள் 

கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.