யானை தாக்கி 10 வயது பெண் குட்டி யானை உயிரிழப்பு
அஞ்செட்டி காப்புகாட்டில் யானை தாக்கி 10 வயது பெண் குட்டி யானை உயிரிழந்தது.
கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 100 க்கும் மேற்பட்ட யானைகள் உணவு, தண்ணீர் மற்றும் இனபெருக்கத்திற்காக ஓசூர் வனக்கோட்டத்திற்கு இடம் பெயர்ந்ததுள்ளது. தற்போது அந்த யானைகள் பல்வேறு குழுக்கலாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு அருகே உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் தற்போது வறட்சியினர் காரணமாக வனப்பகுதியில் இலைகள், மரங்கள் காய்ந்து சருகாகி உள்ளதால், காட்டு தீ ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் வனப்பகுதியை ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஓசூர் வனக்கோட்டம் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட அஞ்செட்டி காப்புகாட்டில் கல்ஏரி எனும் பகுதியில் நேற்று வனஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 வயது பெண் குட்டி யானை உயிரிழந்து காட்டுபன்றிகளால் சேதப்படுத்தி கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, வனசரகர் முருகேசன் மற்றும் கால்நடை மருத்துவர் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குட்டி யானையின் உடலை பரிசோதனை செய்தனர். அதில் மற்றொரு யானை தந்தத்தால் குட்டி யானையை தாக்கியதில் உயிரிழந்தது தெரிய வந்தது.