இயற்கை விவசாயம் மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து கெலமங்கலம் விவசாயிகளுக்கு பயிற்சி

 *இயற்கை விவசாயம் மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து கெலமங்கலம் விவசாயிகளுக்கு பயிற்சி*

கெலமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்(அட்மா)   ஜெக்கேரி  கிராமத்தில்  இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. 

இப்பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகிரி திரு.சி.பச்சையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகிரி திரு. சீனிவாசன், வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு திரு.அறிவழகன், கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், திருமதி.கலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வேளாண்மை அலுவலர் சீனிவாசன், கெலமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலர்   பிரியா, துணை வேளாண்மை அலுவலர்.திரு.வெற்றிவேல்,உதவி  வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜ் ,வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா  மற்றும் ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் திரு. இந்தியன் ஆகியோர் கலந்து கொண்டார்.ஜெக்கேரி கிராம ஊராட்சி தலைவர் இராஜேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை இணை இயக்குநர் பச்சையப்பன் அவர்கள் விவசாயிகளுக்கு   கூறிதாவது,  இயற்கை விவசாயத்தின்  முக்கியத்துவம் உணர்ந்து அனைவரும் பின்பற்ற வேண்டும். குறைந்த செலவு அதிக மகசூல் பெற இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும்,உழவன் செயலியின் பயன்பாடுகள்  குறித்தும் விளக்கம் அளித்தார்.மேலும் வேளாண்மை துணை இயக்குநர் கிருஷ்ணகிரி அவர்கள்  விவசாயிகள் கடன் அட்டை  மற்றும் இராகி  துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் கெலமங்கலம்  அவர்கள்  மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார் . மாவட்ட ஆட்சியர் வேளாண்மை அலுவலர்  உயிர் உரங்கள் மற்றும் பயன்கள் குறித்தும், 50% மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும் எனவும் விளக்கினார்.வேளாண்மை அலுவலர் கெலமங்கலம் அவர்கள் பஞ்சகாவியா,  பூச்சி விரட்டி பயன்கள் குறித்து விளக்கினார். அதியமான்  கல்லூரி உதவி பேராசிரியர்  அவர்கள்  சிறப்புரையாக, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.

உதவி வேளாண்மை அலுவலர் சுந்தர் ராஜ் அவர்கள்  கலைஞர் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள்,

உபகரணங்கள், பண்ணைக்கருவிகள் குறித்து விளக்கி கூறினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கீதா  பஞ்சகாவிய மற்றும் இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு  குறித்து செயல் விளக்கம் செய்ததாவது,  பஞ்சகாவியா தயாரிக்க முதலில் பசுசாணம் 5 கிலோ, 200 மி.லி பசுநெய் கலந்து இரண்டு நாட்கள் வைக்கவும்.  இரண்டு நாட்களுக்கு பிறகு அதனுடன் 2 லிட்டர் பசும்கோமியம் ,2 லிட்டர் பால் ,2 லிட்டர் தயிர் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் அதனுடன் நன்கு பழுத்த வாழைப்பழம் 5 எண்கள், வெல்லம் 500 கிராம் நன்கு கலக்க வேண்டும். துணி கொண்டு டிரம்  கட்டி மூட வேண்டும். பின்னர் தினமும் காலை ,மாலை இரண்டு முறை தொடர்ந்து 15 நாட்கள் கலந்து விட்டவுடன்  பஞ்சகாவ்யா தயாராகிவிடும் . பஞ்சகாவ்யா ஏக்கருக்கு 2 லிட்டர் என்ற வீதத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டது.இப்பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.