தனியார் பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணை கல்வி அமைச்சர் வழங்கினார்

 தனியார் பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணை கல்வி அமைச்சர் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணை வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. சேலம் தொங்கும் பூங்கா கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.

என்.நேரு முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி கலந்து கொண்டு வேலூர் மாவட்டத்திலுள்ள 106 பள்ளிகள், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 302 என மொத்தம் 408 பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணையை வழங்கி பேசினார்.

விழாவில் தனியார் பள்ளிகளின் இயக்குனர் நாகராஜமுருகன், இணை இயக்குனர்கள் ஆனந்தி, ராமசாமி,  தனியார் பள்ளிகளின் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.எஸ்.ரவி, 

தமிழ்நாடு மழலையர், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நல சங்க பொது செயலாளர் நந்தகுமார்,

வேலூர் மாவட்ட செயலாளர் டி ராஜசேகர்

 உள்பட பலர் கலந்து கொண்டனர்.