பொதுக்குழு வழக்கு தீர்ப்பு : ஒசூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 *பொதுக்குழு வழக்கு தீர்ப்பு : ஒசூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்*

அதிமுக பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. இதனை அடுத்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஓசூர் இராயக்கோட்டை சாலை தேர்ப்பேட்டை சந்திப்பு பகுதியில் அதிமுக மாநகர பகுதி செயலாளர்கள் ராஜு, அசோக், மஞ்சுநாத் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவினர் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று புரட்சி தமிழர் என கோஷங்களை எழுப்பினர்.

 இந்த நிகழ்ச்சியில் ஓசூர் முன்னாள் நகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் நாராயணன், 36 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஹேமகுமார்,

மாமன்ற உறுப்பினர் குபேரன் என்கின்ற சங்கர், சிவராமன், வட்ட  செயலாளர்கள் , ரகுமான் சிவக்குமார், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கட் சாமி,மற்றும் ஓசூர் பகுதி கழக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கழகத் தோழர்கள் என கலந்து கொண்டனர்,.

E. V. Palaniyappan