ஓசூரில் அரசு சார்பில் ரூ79 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மலர் வணிக வளாகம் பூமி பூஜை

 *ஓசூரில் அரசு சார்பில் ரூ79 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மலர் வணிக வளாகம் பூமி பூஜை.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்திற்கு சொந்தமான இடம் சுமார் 2.82 ஏக்கர் நிலம் உள்ளது, அந்த இடத்தில் 82 செண்ட்டில் மட்டும் மலர் வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது

நிகழ்ச்சியில் ஓசூர் சாராட்சியர் திருமதி சரண்யா, சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மேயர் சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே எ மனோகரன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

சுமார் 79 லட்சம் மதிப்பீட்டில் 98 கடைகள் கட்டப்பட்டு மலர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது, பணிகள் சுமார் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

E. V. Palaniyappan